திருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு... இதென்ன அப்பா டி.ஆர். இப்டி சொல்லிட்டார்..!

சிம்புவின் திருமணம் குறித்து அவரது தந்தை டி.ஆர். பேசியுள்ளார்.

Recommended Video

Simbu Marriage?: சிம்பு தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்கிறார்- வீடியோ

சென்னை: சிம்பு தன்னுடன் நடித்த பெண்ணை அல்ல, தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருப்பதாக அவரது தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது இரண்டாவது மகன், குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார்.

இந்த சந்திப்பின் போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டி.ராஜேந்தர் மகனும், மணமகனுமான குறளரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். அப்போது அவர் பேசியதாவது:-

அழைப்பிதழ்:

அழைப்பிதழ்:

என்னுடைய இளைய மகன் குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவன் நான். திராவிட முன்னேற்றக் கழகம் என்னுடைய தாய் கழகம்.

மரியாதை:

மரியாதை:

அதனடிப்படையில் என்னுடைய மகள் திருமணத்திற்கு கருணாநிதி மற்றும் தளபதியை அழைத்திருந்தேன் அனைவரும் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். அந்த நட்பும், பந்தமும், பண்பும் தொடர வேண்டும் என்பதற்காகவே தற்போது குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறேன்.

சிம்பு திருமணம்:

சிம்பு திருமணம்:

குறளரசன் திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் போது அனைவரும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என கேட்கிறார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தாலும், ஆண்டவனின் அருளாலும் நிச்சயம் சிம்புவிற்கு விரைவில் நல்ல பெண் கிடைக்கும்.

சிம்பு முடிவு:

சிம்பு முடிவு:

சிம்பு இப்போது தான் ஒரு முடிவெடுத்திருக்கிறார். தன்னுடன் நடித்த பெண்ணை திருமணம் முடிப்பதை விட தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அவருக்கு கூடிய விரைவில் கடவுளின் அருளால் நல்ல பெண் கிடைக்கும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடிகை வேண்டாம்:

நடிகை வேண்டாம்:

முன்னதாக நடிகர் சிம்பு, வல்லவன் படத்தில் நடித்த போது நயன்தாராவையும், பின்னர் வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகாவையும் காதலித்தார். ஆனால் அந்த இரண்டு காதல்களுமே தோல்வியில் முடிந்தது ஊரறிந்த கதை தான். இந்த நிலையில் தான் பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்திருப்பதாக டி.ஆர் பேச்சிலிருந்து தெரிய வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X