ஓவர் பட்ஜெட் பிரச்னையால் ஒதுங்கினாரா? நடிகர் விஷால் நடிக்க இருந்த படத்தில் இந்த ஹீரோ நடிக்கிறாராமே?

By

சென்னை: விஷால் நடிக்க இருந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஷால், துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரசன்னா, ரகுமான், கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார். படப்பிடிப்பின்போது மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டது.

ராணுவ அதிகாரி

ராணுவ அதிகாரி

இதையடுத்து படத்தில் இருந்து விலகினார், மிஷ்கின். அவர் விலகியதற்கான காரணத்தை விஷால் தெரிவித்தார். பின்னர் மிஷ்கின், விஷாலை கடுமையாகத் திட்டினார். இதனால் பிரச்னை பரபரப்பானது. பின்னர், துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்குவதாக அறிவித்தார், விஷால். சமீபத்தில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, எம்.எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

விஷால் பிலிம்பேக்டரி

விஷால் பிலிம்பேக்டரி


இந்தப் படத்தில், ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா காஸன்ட்ரா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மனோபாலா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்களையும் மிஷ்கின், தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் தயாரித்து வருகிறார்.

ஆனந்த் ஷங்கர்

ஆனந்த் ஷங்கர்

இந்நிலையில், ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திலும் அவர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனந்த் ஷங்கர், விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி, விக்ரம், நயன்தாரா நடித்த இருமுருகன், விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர். அவர் கதையை கேட்ட விஷால், நடிக்கலாம் என்று கூறியிருந்தார். விஷால் ஜோடியாக ரிது வர்மா, வில்லனாக ஆர்யா நடிப்பதாகக் கூறப்பட்டது.

அதிக பட்ஜெட்

அதிக பட்ஜெட்

படத்தை, நடிகர் விஷாலே சொந்தமாகத் தயாரிக்க இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்துக்கான பட்ஜெட், விஷால் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால், ஏற்கனவே 2 படங்களை தயாரித்து வரும் விஷால், இதையும் அதிக பட்ஜெட்டில் தயாரிக்க மறுத்து விட்டதாகக் கூறபடுகிறது. இதனால், ஆனந்த் ஷங்கர் வேறு தயாரிப்பாளரைத் தேடி வந்தார்.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார், இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் இதில் விஷாலுக்குப் பதில் சிம்பு நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. நடிகர் சிம்பு, இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X