சிபி முதல் சிம்பு வரை.. கோட் வேர்ட் கன்ஃபார்ம்.. வெள்ளை சட்டை, காக்கி பேன்ட்.. இளம் பெண்கள் கூடவா?
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது என்றே கூறலாம். வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் செலவு செய்து வந்து தங்கள் வாக்கினை செலுத்த சென்னைக்கு வந்த பலர் சொந்த ஊருக்குச் செல்ல முறையான பேருந்து வசதி கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு லாரி பிடித்துக் கூட ஊருக்குச் சென்று ஓட்டுக்களை போட்டு வருகின்றனர்.
தேர்தல் நாளை முன்னிட்டு துணிக் கடைகளில் விஜய்யின் அரசியல் டிரெஸ் கோடான வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட்டுக்கு பிரபலங்கள் முதல் கல்லூரி பெண்கள் வரை செம மவுசு கூடியுள்ளது.

நடிகர்கள் முதல் நடிகைகள் வரை இன்று அந்த டிரெஸ் கோடில் பலரும் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்கினை செலுத்திச் சென்றுள்ளதை பார்த்தாலே அவர்கள் விஜய்யின் விசில் சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போட்டுள்ளனர் என விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அண்ணாமலை கூட: பாஜக அண்ணாமலையே இன்று வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்து வந்து தான் வாக்கு செலுத்தினார். அவரிடமே நீங்க விஜய்யின் தவெக கட்சிக்கும் விசில் சின்னத்துக்கும் தான் ஓட்டுப் போட்டீங்களா என்று கேட்டதும் நான் ஒரு போலீஸ்காரன் காக்கி பேன்ட், வெள்ளை சட்டையை பல நேரங்களில் அணிந்து வருகிறேன். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி இதை போட்டிருக்கார், விஜய் இதை போட்டிருக்கார், நானும் இதை போட்டிருக்கேன். ஆனால், நான் எந்த பக்கமும் இல்லை. மக்கள் பக்கம் மட்டுமே நிற்கிறேன் என்றார்.

சிபிராஜ் முதல் சிம்பு வரை: சத்யராஜ், திவ்யா சத்யராஜ் மாறி மாறி விஜய்க்கு எதிராக பிரச்சாரம் பண்ணினாலும் வீட்டில் இருந்தே அதை ஒரே ஆளாக முறியடித்து விட்டவர் தான் சிபிராஜ். இன்று காலை அவரும் அதே டிரெஸ் கோடில் தான் வாக்கு செலுத்தினார். மேலும், சில சினிமா நடிகர்களும் இதே டிரெஸ் கோடில் இன்று வந்து வாக்கு செலுத்தினர். இந்நிலையில், தற்போது நடிகர் சிம்புவும் வெள்ளை சட்டை, காக்கி பேன்ட்டில் வந்து வாக்கு செலுத்திய நிலையில், விஜய்க்குத்தான் ஓட்டுப்போட்டுள்ளார் என தளபதி ரசிகர்கள் சிம்புவை தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். முன்னதாக டி. ராஜேந்தரும் விஜய்க்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி பெண்கள் கூட: ரச்சிதா மகாலட்சுமி, சூர்ய பிரபா உள்ளிட்ட நடிகைகள் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து வீடியோ ரீல்ஸ் போட்டு விஜய்க்கு ஆதரவு அளித்தனர். தாமரை செல்வி தனது கணவருடன் தவெக கட்சிக் கொடியை வைத்து ஆட்டமே போட்டுவிட்டார். இதைவிட பெரிய விஷயமாக பல கல்லூரி மாணவிகள் மற்றும் முதல் முறை வாக்காளர்களான இளம் பெண்களும் வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்து வந்து எங்க அண்ணனுக்கு நாங்க தான் சப்போர்ட் பண்ணுவோம் என ஓட்டுப் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications