Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
கன்னட ரீமேக்.. சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணையும் படம்.. 10 இயக்குனர்கள் வெளியிட்ட 'பத்து தல..'
சென்னை: சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'பத்து தல' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
நடிகர் சிம்பு இப்போது ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இதை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
இதையடுத்து மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு.. ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது ஜெயம் ரவியின் பூமி..ரசிகர்களுக்கு டச்சிங் லட்டர்!

கிருஷ்ணா
இந்தப் படங்களை அடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஓபிலி என். கிருஷ்ணா இயக்குகிறார். இவர் கிருஷ்ணா என்ற பெயரில், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உட்பட சில படங்களை இயக்கியவர். பத்து தல படம், இது கன்னடத்தில் வெளியான மஃப்டி (Mufti)என்ற படத்தின் ரீமேக்.

கன்னட ரீமேக்
கன்னடத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி, சாயா சிங் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் கடந்த ஆண்டு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. சிவராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கவுதம் கார்த்திக்கையும் ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்நிலையில் இதன் ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்குகிறது.

பத்து இயக்குனர்கள்
இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டிலை, வெங்கட் பிரபு, ராஜேஷ், ஆனந்த் ஷங்கர், விக்னேஷ் சிவன், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், சந்தோஷ் ஜெயக்குமார், அஸ்வத் மாரிமுத்து, சாம் ஆண்டன் ஆகிய 10 இயக்குனர்கள் இணைந்து இன்று வெளியிட்டனர். படத்துக்கு பத்து தல என்று டைட்டில் வைத்துள்ளனர்.

வேறொரு பரிணாமம்
தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா, ' எஸ்டிஆர் சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர். தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் அவர் வந்து நிற்பது, மகிழ்ச்சியை தருகிறது. இந்த டைட்டிலின் அர்த்தத்தை, அதன் ஆழத்தை, படத்தின் வழியே ரசிகர்கள் கண்டிப்பாக உணர்வார்கள் என்று கூறியுள்ளார்.