சிம்புவின் சினிமா வாழ்க்கையை காலி பண்ணுகிறார்களா?
Recommended Video

சென்னை:
சிம்பு தற்போது புதுவழியில் செல்கிறார். அவர் செய்வதை எல்லாம் பார்த்தால் சுந்தர் சி. கூறியது தான் நினைவுக்கு வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த சிம்பு வளர்ந்த பிறகு ஹீரோவானார். மிக இளம் வயதிலேயே படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
சிம்பு பெரிய அளவுக்கு வருவார் என்று எதிர்பார்த்தபோது ஏதேதோ நடந்துவிட்டது.

சிம்பு
நம்மாளுக ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டை ஆர்டிஸ்ட்டாக இருக்க விட மாட்டாங்க. அவங்களுக்கு எது எல்லாம் தேவை இல்லையோ அதில் எல்லாம் கூட்டிட்டு போய் அவங்களின் வாழ்க்கையை காலி பண்ணுவாங்க என்று நட்பே துணை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுந்தர் சி. தெரிவித்தார். சிம்புவின் கெரியரிலும் அப்படித் தான் நடந்துவிட்டது, நடக்கிறது போன்று.

வம்பு
சிம்பு என்றாலே வம்பு என்று திரையுலகினர் ஒதுங்கிய காலம் வந்தது. அவர் படப்பிடிப்புகளுக்கு சரியாக வராமல் இயக்குநர்களை கதறவிட்டார். பின்னர் அவராகவே திருந்தி சமத்துப்பிள்ளையாகிவிட்டார்.

கவுரவத் தோற்றம்
நல்ல பிள்ளையாக மாறி பொது பிரச்சனைகளை தீர்க்க எல்லாம் யோசனை சொல்லி மக்களிடம் பாராட்டு பெற்றார் சிம்பு. நிஜ வாழ்க்கை இப்படிப் போக சினிமா வாழ்வில் அவர் தவறான முடிவை எடுத்தார். அதாவது ஓவியாவின் 90 எம்.எல். படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்தார்.

சர்ச்சை
கவுரவத் தோற்றத்தில் நடித்தது தப்பு இல்லை. ஆனால் வில்லங்கமான படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்ததுடன் ஓவியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது தான் தப்பு. சிம்பு இப்படி செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வில்லன்
இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த சிம்பு தற்போது வில்லனாக மாறியுள்ளார். ஆர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார் சிம்பு. சிம்பு புது ரூட்டில் செல்லத் துவங்கியுள்ளார். அது அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











