ஓஹோ.. கள்ளக் காதலா.. வெளியான கார்த்திக் டயல் செய்த எண்.. வேற லெவலில் வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: சிம்பு, திரிஷா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Karthik Dial Seytha Yenn - மரண கலாய் செய்யும் நெட்டிசன்ஸ்

மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அந்த விண்ணைத் தாண்டி வருவாயா மேஜிக்கை ரசிகர்களால் உணர முடிகிறது.

லாக்டவுனில் அவரவர் வீட்டில் இருந்தபடியே இப்படியொரு குறும்படத்தை சூப்பரா எடுத்துட்டாங்களே என்ற பாராட்டுக்களும், என்ன கெளதம் மேனன் சார் காதல் கதையை கள்ளக் காதல் கதையாக மாத்திட்டீங்களே என கண்டபடி ட்ரோல் செய்து மீம்களையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.

வீட்டைத் தாண்டி வருவாயா

வீட்டைத் தாண்டி வருவாயா

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள "கார்த்திக் டயல் செய்த எண்" ஷார்ட் பிலிம் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவுக்கு கீழே குவியும் சுவாரஸ்யமான கமெண்ட்டுகளும், சமூக வலைதளங்களில் பரவி வரும் மீம்ஸ்களும் கோலிவுட் ரசிகர்களுக்கு செம தீனி போட்டுள்ளன. அது விண்ணைத்தாண்டி வருவாயா இது வீட்டைத் தாண்டி வருவாயா என கலாய்த்து வருகின்றனர்.

பத்து வருஷம் கழிச்சு

பத்து வருஷம் கழிச்சு

திரிஷா, கெளதம் மேனன் இயக்கும் ஷார்ட் பிலிம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சர்ப்ரைஸ் விஷயமாக மீண்டும் கார்த்திக் கதாபாத்திரத்தில் சிம்புவை காட்டிய இடத்திலேயே ஸ்கோர் செய்து விட்டார் கெளதம் மேனன். "சார் பத்து வருஷம் கழிச்சு மீண்டும் கார்த்திக்கை பார்த்துட்டோம் சார்" என விடிவி கார்த்திக் சந்தோஷப்படுவதாக மீம்கள் பறக்கின்றன.

செம டைட்டில் கார்டு

செம டைட்டில் கார்டு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் டைட்டில் கார்டு நோட் புத்தகத்தில் கிறுக்கப்பட்டும், தண்ணீரில் மிதந்து வருவது போலவும் இருக்கும். "கார்த்திக் டயல் செய்த எண்" குறும்படத்தில் எல்லாமே கம்ப்யூட்டர் நோட்பேடில் டைப் செய்யப்பட்டது போல உருவாக்கி இருப்பது சூப்பர். அதிலும், அந்த ஸ்க்ரீனில் வரும் STR டைட்டில் கார்டு வேற லெவல் என சிம்பு ரசிகர்கள் பாரட்டி வருகின்றனர்.

மேட்டர் எதிர்பார்க்கிறான் போல

மேட்டர் எதிர்பார்க்கிறான் போல

விண்ணைத் தாண்டி வருவாயா மேஜிக்கை ரீக்ரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் சிலாகித்து வரும் நிலையில், சில நெட்டிசன்கள் இந்த குறும்படத்தை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஓ.. இது கள்ளக் காதல் படமா என்றும், சிம்பு, எனக்கு நீ வேணும் ஜெஸ்ஸி என கேட்பதை, திரிஷா, ஓ இவன் நம்ம கிட்ட மேட்டர் எதிர்பார்க்கிறான் போல இருக்கு.. என விவேக்கின் சாமி காமெடி மீமை போட்டு பங்கம் செய்துள்ளனர்.

கிழித்து தொங்கவிட்டாச்சு

கிழித்து தொங்கவிட்டாச்சு

அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட எனக்கு நீ வேணும் என சிம்பு கேட்பதும், நீ எனக்கு மூனாவது குழந்தை மாதிரி என சிம்புவின் ஆசை வலையில் விழாமல் திரிஷா விலகுவதுமாக உள்ள இந்த குறும்படத்தை பலரும் விமர்சிக்க தொடங்கி விட்டனர். மக்கள் ரியாக்‌ஷன் என கவுண்டமணி காமெடி வீடியோவை போட்டு, கெளதம் மேனனை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

பிட்டு படம்

பிட்டு படம்

தொனத்தொனன்னு பேசிட்டிருக்கானுங்களே ஒழிய ஒரு முடிவுக்கு வரமாற்றானுங்க.. ரொம்ப அறுவை... என்றும், நம்ம பிட்டை நமக்கே போடுறானே.. அண்ணா இது நம்ம ஜெஸ்ஸி இல்ல ஆபாச பட நடிகை ஜெஸ்ஸி பின்க்மேன் என காதல் படத்தை ஆபாச பட ரேஞ்சுக்கு மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அடுத்த போன் கால்

அடுத்த போன் கால்

2010ம் ஆண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியானது. சமீபத்தில் அதன் 10வது ஆண்டு கொண்டாட்டம் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது வெளியாகி இருக்கும் ‘கார்த்திக் டயல் செய்த எண்' ஷார்ட் பிலிமை பார்த்த ரசிகர்கள், கார்த்திக் இன்னும் 10 வருஷம் கழிச்சு ஜெஸ்ஸிக்கு அடுத்த போன் கால் பண்ணுவான் என ஓட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X