வாவ்.. திரிஷாவுக்காக மீண்டும் இணைந்த கூட்டணி.. ரஹ்மானின் ஸ்பெஷல் வேற.. ’கார்த்திக் டயல் செய்த எண்’
சென்னை: 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்திற்காக விண்ணைத்தாண்டி வருவாயா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
காதலர்கள் கொண்டாட்டத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும்.
திரிஷா நடிப்பில் 'கார்த்திக் டயல் செய்த எண்' என அந்த படத்தின் தொடர்ச்சியான குறும்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை இடம்பெற உள்ளதாக சூப்பரான தகவலை நடிகை திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அறிவித்துள்ளார்.

கெளதம் இயக்கம்
2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்கி, காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய ஜெஸ்ஸி கிரேஸை உருவாக்கிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், 2020ம் ஆண்டு, இந்த லாக்டவுனில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்' எனும் குறும்படத்தை வீட்டில் இருந்தபடியே இயக்கி அசத்தி வருகிறார்.

வரவேற்பை பெற்ற டீசர்
நடிகை திரிஷாவுக்கு ஐபோனில் 4K செட்டிங்கில் எப்படி கேமரா ஹேண்டில் பண்ணி படம் எடுப்பது என்பதை வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் சொல்லிக் கொடுத்திருந்தார் கெளதம் மேனன். திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்த குறும்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள், பத்தாண்டுகளுக்கு முன்னால் ஜெஸ்ஸியை விட்ட இடத்திலேயே மீண்டும் பார்த்து மெய் சிலிர்த்தனர்.

சிம்புவும்
மஹா, மாநாடு என தனது அடுத்த ஆட்டத்தை ஆட ஆரம்பித்துள்ள நடிகர் சிம்பு, இந்த லாக்டவுனில் வீட்டில் சமையல் செய்து அசத்தி வருகிறார். சமீபத்தில் சிம்புவின் சமையல் வீடியோ வைரலான நிலையில், விரைவிலேயே ‘கார்த்திக் டயல் செய்த எண்' ஷார்ட்பிலிமில் சிம்பு தரிசனம் தர காத்திருக்கிறார்.

இசைப்புயலின் இசையும்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான். மீண்டும் அந்த மேஜிக்கை கொண்டு வர வேண்டும் என்றால், அவரின் பங்கு இருந்தால் மட்டுமே முடியும் என உணர்ந்த கெளதம் மேனன், ‘கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்திற்காக ஒரு அசத்தலான பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசைக்க கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சீக்கிரமே
அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களை தொடர்ந்து மீண்டும் சிம்பு, திரிஷா காம்பினேஷனை ரசிகர்கள் அழகான குறும்படத்தின் வாயிலாக காண உள்ளனர். கூடவே ஏ.ஆர். ரஹ்மானின் பாடலும் வருவதால், ரசிகர்கள் எப்போப்பா அதை ரிலீஸ் பண்ணுவீங்க என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவிலே வெளியாகும் என்றும் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் கூறியிருக்கிறார் திரிஷா.
Recommended Video

லாக்டவுன் முடியட்டும்
இயக்கம் மற்றும் நடிப்பு என கெளதம் மேனன் ஒரு பக்கம் படு பிசியாக இருக்கிறார். மஹா படத்தின் ரிலீசுக்காகவும், மாநாடு படத்தின் ஷூட்டிங்குக்காகவும் சிம்பு காத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் மற்றும் மோகன் லாலின் ராம் என திரிஷாவும் இந்த லாக்டவுன் முடிவுக்கு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











