செல்வராகவன் புதிய படம்: சிம்பு - த்ரிஷா ஜோடி!

By Shankar

சென்னை: செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் புதுப் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர் த்ரிஷாவும் சிம்புவும்.

'இரண்டாம் உலகம்' படத்துக்குப் பிறகு, குறுகிய காலத்தில் ஒரு படத்தினை இயக்கத் திட்டமிட்டுள்ளார் செல்வராகவன். 'காதல் கொண்டேன்', '7 ஜி ரெயின்போ காலனி' படங்களின் பாணியில் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர், ஏற்கெனவே சிம்புவுடன் ‘அலை', ‘விண்ணைத் தாண்டி வருவாயா' படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் இது.

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

செல்வராகவனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாதான் இந்தப் படத்திற்கும் இசையமைப்பார் என்கிறார்கள். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழைய கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

செல்வராகவன் - சிம்பு முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இப்படத்தினை ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

அடுத்து தனுஷ்

அடுத்து தனுஷ்

இந்தப் படத்துக்குப் பிறகு தன் தம்பி தனுஷை வைத்தும் ஒரு குறுகிய காலப் படம் ஒன்றை இயக்குகிறார் செல்வராகவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X