ஏப்ரல் 25ம் தேதி இணையும் திரிஷா-சிம்பு
சென்னை: வரும் ஏப்ரல் 25 அன்று இணைய உள்ளார்கள் திரிஷாவும்,சிம்புவும்.உடனே,யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்.இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அன்றுதான் துவங்குகின்றது.
சிம்புவும், த்ரிஷாவும் இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஷீட்டிங் வரும் ஏப்ரல் 25 முதல் தொடங்க உள்ளது.
செல்வராகவன் இயக்கும் இப்படத்தில் தம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின் மீண்டும் ஜோடி சேருகின்றனர் சிம்பு மற்றும் திரிஷா.

விண்ணைத்தாண்டிய காதல்:
விண்ணைத்தாண்டி வருவாயாவில் மிக அழகான காதலை திரையில் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த ஜோடி. கிட்டதட்ட இளைஞர்கள் அனைவரும் அப்படத்தை 100 முறைக்கு மேலாவது பார்த்திருப்பீர்கள்.

மென்மையான காதல் கதை:
அவர்கள் இருவரும் மீண்டும் இணையும் இந்த படமும் வசூலை குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இது ஒரு மென்மையானகாதல் கதை என இயக்குனரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.தமிழக தேர்தலுக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளி:
இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பின்பு ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்:
ஒளிப்பதிவு மது அம்பட்.இரண்டாம் உலகம் வெற்றிக்குப் பின் செல்வராகவனின் இப்புதிய படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











