வந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீஸுக்கு முன்பு அடுத்தடுத்து வம்பில் சிக்கிய சிம்பு
சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் பட ரிலீஸுக்கு முன்பு சிம்பு அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் சிம்பு அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

சிம்பு
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் வரும் எனக்கா ரெட் கார்டு பாடல் சிம்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு பதிலடி கொடுப்பது போன்று அமைந்துள்ளது. அந்த சர்ச்சை அடங்கும் முன்பே சிம்பு அடுத்த சர்ச்சையில் தானாக வந்து சிக்கிக் கொண்டார்.

பால்
வந்தா ராஜாவாதான் வருவேன் பட ரிலீஸையொட்டி தனக்கு பெரிய கட்அவுட்டுகள் வைத்து அண்டா அண்டாவாக பால் ஊற்றுமாறு சிம்பு தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையாகிவிட்டது.

பால் முகவர்கள்
அண்மை காலமாக புதுப்படங்களுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் சிம்புவுக்கு பால் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மோதல்
பொங்கலுக்கு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நிச்சயம் வரும் என்று அறிவித்தார் சிம்பு. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சிம்பு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தேதி ஒதுக்கவில்லை. இதையடுத்து அடுத்த மாதம் ரிலீஸாகிறது. செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தபோது அமைதியாக இருந்த சிம்பு தற்போது மீண்டும் வம்பில் மாட்டிக் கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











