விஜய் சேதுபதி வழியில் சிம்பு.. ஆனா, இது எந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆகும்னு தெரியலையே!

புதிய படமொன்றில் ஆர்யாவுக்கு வில்லனாக சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில், ஆர்யாவுக்கு வில்லனாக சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இதற்கிடையே ஓவியா நடித்த 90 எம் எல் படத்திற்கு இசையமைத்ததோடு, அப்படத்தில் கௌரவத் தோற்றத்திலும் வந்து போனார்.

தற்போது, ஹன்சிகா நடித்துவரும் 'மஹா' படத்தில், ஸ்பெஷல் கேரக்டர் ஒன்றில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

லண்டன் பயணம்:

லண்டன் பயணம்:

சமீபகாலமாக குண்டாக காட்சி தரும் சிம்பு, மீண்டும் தனது உடலை பழைய மாதிரி மெலிய வைக்க சிறப்பு பயிற்சிகள் செய்வதற்காக லண்டன் சென்றுள்ளார். லண்டனில் இருந்து திரும்பியதும் அவர் மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்குவார் எனத் தெரிகிறது.

வில்லனாக சிம்பு:

வில்லனாக சிம்பு:

இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ள புதிய படமொன்றில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படத்தில் நாயகனாக அல்ல, வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

மஃப்டி பட ரீமேக்:

மஃப்டி பட ரீமேக்:

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஶ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற 'மஃப்டி' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக சிம்பு நடிக்க, நாயகனாக ஆர்யா போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவிப்பு:

அறிவிப்பு:

இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. விரைவில், இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்க உள்ளதால், அப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதி:

இதுவரை நாயகனாக மட்டுமே சிம்பு நடித்து வருகிறார். மற்றொரு கதாநாயகன் படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை. ஏற்கனவே தமிழில் நாயகனாக அதிக படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு வில்லனாகவும், பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

செட்டாகுமா?

செட்டாகுமா?

நாயகன் கதாபாத்திரத்தைப் போலவே, வில்லன் வேடமும் விஜய் சேதுபதிக்கு நன்றாகவே பொருந்தியது. ஆனால், சிம்புவுக்கு வில்லன் வேடம் எந்தளவுக்கு செட்டாகும் என்பது தெரியவில்லை. இதுவரை அவரை நாயகனாகவே பார்த்துப் பழகிய ரசிகர்கள், அவரை வில்லனாக ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X