அஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்?
சென்னை: சிம்புவின் வாலு படம் அஜீத் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அஜீத் குமாரின் படம் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சியிலேயே அதை பார்த்துவிடுவார் சிம்பு.
படத்தை பார்ப்பதோடு நிறுத்திவிட மாட்டார் அஜீத்தின் நடிப்பு பற்றி தனது படப்பிடிப்பில் புகழந்து பேசிக் கொண்டே இருப்பார். இப்படி தல புராணம் பாடும் சிம்பு தான் நடித்துக் கொண்டிருக்கும் வாலு படத்தை தனக்கு பிடித்த அஜீத்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
இந்நிலையில் அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் சிம்புவும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

