»   »  ஜெயலலிதாவின் உடலுக்கு சிம்பு, வடிவேலு, உதயநிதி, அனிருத் அஞ்சலி

ஜெயலலிதாவின் உடலுக்கு சிம்பு, வடிவேலு, உதயநிதி, அனிருத் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர்கள் சிம்பு, வடிவேலு, பிரச்சன்னா, சமுத்திரக்கனி, மயில்சாமி, நடிகை சினேகா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Simbu, Vadivel, Udhayanidhi pay tribute to Amma

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் வடிவேலு ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அரசியலால் படாதபாடு பட்டு தற்போது தான் ஓரளவுக்கு நன்றாக உள்ளார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரச்சனா அவரது மனைவி சினேகா, நடிகர்கள் சிம்பு, சமுத்திரக்கனி, மயில்சாமி உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின் , சசிகுமார், கருணாஸ் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

English summary
Actors Simbu, Vadivel, Udhayanidhi Stalin, Sasikumar, Prasanna, Karunas have paid tribute to Jayalalithaa.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil