25ம் தேதி ரிலீசாகும் சிம்புவின் மாநாடு... ஜரூராக துவங்கிய டிக்கெட் விற்பனை

சென்னை : நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு.

Recommended Video

பிரச்சனைய நான் பாத்துக்குறேன்! என்ன நீங்க பாத்துக்கோங்க! | STR emotional Speech | Maanadu PreRelease

இந்தப் படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. வரும் 25ம் தேதி இந்தப் படம் உலகளவில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கியுள்ள நிலையில், டிக்கெட் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்தப் படம் தீபாவளிக்கே ரிலீசாக இருந்த நிலையில், விநியோகஸ்தர்களின் நலனை கருத்தில் கொண்டு படத்தின் ரிலீஸ் தேதியை 25ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

25ம் தேதி ரிலீஸ்

25ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் அடுத்த வாரத்தில் மாநாடு படம் ரிலீசாக உள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வெங்கட் பிரபு இயக்கம்

வெங்கட் பிரபு இயக்கம்

படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படம் சிறப்பான முறையில் உருவாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகள் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், படத்தின் ரிலீசிற்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அப்துல் காலிக் கேரக்டர்

அப்துல் காலிக் கேரக்டர்

இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா மற்றும் சிம்பு இடையிலான போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றன. படத்தில் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இடையிலான பாடல் ஒன்று வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

யுவன் இசை

யுவன் இசை

படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளது வெளியிடப்பட்டுள்ள ட்ரெயிலர் மற்றும் பாடலில் வெளிப்பட்டுள்ளது. படத்தின் மெஹ்ருசைலா பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.

புக்கிங்குகள் துவக்கம்

புக்கிங்குகள் துவக்கம்

அடுத்த வாரத்தில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் புக்கிங்குகள் துவங்கியுள்ளன. டிக்கெட்டுகளை புக் செய்ய ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதையே இது காட்டுகிறது. சிம்புவின் முந்தைய படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் மாநாடு படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X