வெற்றிமாறன் - சிம்புவின் அரசன் படத்துக்கு வந்திருக்கும் சிக்கல் இதுவா?.. தயாரிப்பாளர் பிளான் சொதப்புதாம்
சென்னை: சிம்புவை வைத்து வெற்றிமாறன் அரசன் படத்தை இயக்கிவருகிறார். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்திருப்பதால் பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார்கள் எஸ்டிஆர் ரசிகர்கள். கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள். இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி அவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த இன்னிங்ஸில் அவரது செயல்பாடுகள் நிதானமாகவும் அதேநேரம் அதிரடியாகவும் இருக்கின்றன. மாநாடு, வெந்து தணிந்தது காடு என ஹிட் படங்களில் நடித்த அவர் பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்களிலும் நடித்தார். ஆனால் கடைசியாக வந்த இரண்டு படங்களும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் சிம்புவின் நடிப்புக்கு வழக்கம்போல் எக்கச்சக்க அப்ளாஸ்கள் கிடைத்தன.
வெற்றிமாறனுடன் கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில் வெற்றிமாறனுடன் இணைந்திருக்கிறார் சிம்பு. ஏற்கனவே எஸ்டிஆரை வைத்துதான் வடசென்னை படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றி. ஆனால் அப்போது சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக தனுஷ் உள்ளே வந்தார். எனவே இந்த முறை வெற்றியுடன் சிம்பு இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ரசிகர்களும், திரைத்துறையினரும் வைத்திருக்கிறார்கள்.

என்ன கதை?: படத்துக்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மதுரையில் இருக்கும் கபடி வீரர் சென்னைக்கு வருவதும்; அங்கே வந்து ரவுடியாக மாறுவதும்தான் கதை என சொல்லப்படுகிறது. இது மறைந்த ரவுடி டைகர் சிவாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவருவதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி விலகலா?: இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான வேடத்தை ஏற்றார். அவர் சமீபத்தில் நடந்த முதல் ஷெட்யூலில்கூட கலந்துகொண்டார். ஆனால் சில நாட்களாக வரும் தகவல்கள்படி அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும்; அவருக்கு பதிலாக ராணா டகுபதியை நடிக்க வைக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.
படத்துக்கு வந்திருக்கும் சிக்கல்?: இந்நிலையில் அரசன் படம் பற்றி புதிய தகவலும் வந்திருக்கிறது. அதாவது இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்க பிரபல நிறுவனங்கள் போட்டிப்போடுகின்றனவாம். ஆனால் தாணுவோ இந்தப் படத்தை மட்டுமின்றி தான் தயாரித்திருக்கும் ட்ரெய்ன் படத்தையும் வாங்கும்படி சொல்ல; அந்த நிறுவனங்கள் பின் வாங்குகின்றனவாம். இதனால் தாணு என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக கோலிவுட் பட்சிகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications











