Simbu: இந்த விசயத்துல சிம்புவுக்கு தான் நன்றி... விக்னேஷ் சிவன் ஓபனாவே சொல்லிட்டாரே!
சென்னை: சிம்புவின் போடா போடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களையும் இயக்கினார்.
இந்நிலையில், நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் நாயகியாக நடித்த நயன்தாராவையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், சிம்புவுக்கு விக்னேஷ் சிவன் திடீரென நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்:விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம் போடா போடி, 2012ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். சிம்பு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், முக்கியமான கேரக்டர்களில் ஷோபனா, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து வெளியான நானும் ரவுடி தான் திரைப்படமே விக்னேஷ் சிவனுக்கு அடையாளம் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் நயன்தாராவுடனான காதலுக்கும் வழி வகுத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது தான், விக்கியும் நயனும் காதலிக்கத் தொடங்கினர் என சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு முன்பு நயன்தாராவை சிம்பு உருகி உருகி காதலித்து வந்தார்.
அதன்பின்னர் சிம்பு - நயன் இடையேயான காதல் பிரேக்-அப் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான பின்னரே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கும் பெற்றோராகிவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் சிம்புவை இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பேசியுள்ளது வைரலாகி வருகிறது. போடா போடி படத்தில் இயக்குநராக மட்டும் இல்லாமல், 3 பாடல்களையும் எழுதியிருந்தார் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், மாரி, ரெமோ, விக்ரம் வேதா, மாஸ்டர், வலிமை, டான் என பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
இயக்குநராக ஹிட் கொடுக்கிறாரோ இல்லையோ, பாடல்கள் எழுதி ரசிகர்களுக்கு அடிக்கடி வைப் கொடுத்து வருகிறார். ஆனால், இதற்கெல்லாம் காரணம் சிம்பு தான் என்ற உண்மையை வெளிப்படையாகவே கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். சிம்புவும் விக்னேஷ் சிவனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏற்பட்ட நட்பில் தான் போடா போடி படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு.

மேலும், போடா போடி படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன் சொல்லும் வசனங்களை கேட்டு சிம்பு சிரித்துக்கொண்டே அவரை உற்சாகப்படுத்துவாராம். அதன் பிறகு படங்களுக்கும் பாடல்கள் எழுத வேண்டியது தானே என விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார் சிம்பு. அப்படி உருவான ஆர்வம் தான் இன்று தன்னை ஒரு பாடலாசிரியராக கொண்டு வந்துள்ளது. இதற்கு முழு காரணமும் சிம்பு தான் என விக்னேஷ் சிவன் மிக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் தனது மனைவி நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவை, விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பாராட்டியுள்ளது ரசிகர்களுக்கே ஆச்சரியம் கொடுத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குநராகவும் சிம்பு தான் மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளாராம். முதல் படத்திற்காக விக்னேஷ் சிவனிடம் யாருமே கதை கேட்காமல் ரிஜக்ட் செய்த நேரத்தில் சிம்பு தான் போடா போடி படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











