»   »  விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத், அரவிந்த்சாமி நடிக்கும் மணிரத்னம் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத், அரவிந்த்சாமி நடிக்கும் மணிரத்னம் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு-வீடியோ

சென்னை : கண்களில் கவிதை பேச வைக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது படங்களில் வரும் காதல் காட்சிகள் பலருக்கும் விருப்பமானவை.

இவர் கடைசியாக இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்த 'காற்று வெளியிடை' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார் எனும் தகவல் வெளியானது.

 மெட்ராஸ் டாக்கீஸ்

மெட்ராஸ் டாக்கீஸ்

தற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், படத்தில் பணியாற்றவிருப்பவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் சேதுபதி - சிம்பு

விஜய் சேதுபதி - சிம்பு

மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.

பணியாற்றுபவர்கள்

பணியாற்றுபவர்கள்

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

முதல்முறை கூட்டணி

முதல்முறை கூட்டணி

மணிரத்னம் படத்தில் நடிப்பது இவர்களில் பலருக்கும் முதல் முறை. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் மணிரத்னத்துடன் முதல்முறையாகக் கை கோர்க்கிறார்கள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'இறுதியாக, எனது கனவு நனவாகப் போகிறது. இது மணி சாரின் முந்தைய படங்களில் இருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

பெரிய நடிகர் பட்டாளத்தோடு உருவாகும் இந்தப் படம் உறுதியானதை அடுத்து மணிரத்னம் ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

English summary
Cast and crew of Mani Ratnam's next film has been officially released. Mani Ratnam's Madras Talkies company is producing this film. In this film, AR Rahman is composing the music and Santhosh Shivan working as a cinematographer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil