விஆர்வி பார்க்க தியேட்டருக்கு போகிறீர்களா?: உங்களுக்கு ஒரு சர்பிரைஸ்
Recommended Video

சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த படத்தின் அதிகாலை காட்சி 5 மணிக்கு திரையிடப்படுகிறது.

வந்தா ராஜாவாதான் வருவேன்
சென்னையில் உள்ள ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸில் உள்ள அனைத்து ஸ்கிரீன்களிலும் நாளை காலை 5 மணிக்கு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் திரையிடப்பட உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சிம்பு
நாளை வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீஸாகும் தியேட்டர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. அவர் ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ், காசி தியேட்டர், ஜிகே சினிமாஸ் உள்ளிட்ட தியேட்டர்களுக்கு செல்ல உள்ளாராம்.

எஸ்டிஆர்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு சிம்புவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு
வந்தா ராஜாவாதான் வருவேன் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக எடுக்கப்பட்டுள்ளது. சிம்புவின் கோரிக்கையை ஏற்று அவரின் ரசிகர்கள் யாரும் நாளை பேனர்கள், கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











