'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா? #Indian2
Recommended Video

சென்னை: இந்தியன் 2 படத்தில் இருந்து சிம்பு ஏன் விலகினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இந்த படத்தில் கமல் பேரனாக சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
பின்னர் சிம்புவுக்கு பதில் சித்தார்த் நடிப்பதாக கூறப்பட்டது.

பிரச்சனை
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த படத்தில் நடித்தபோது சிம்புவுக்கு சம்பள பிரச்சனை ஏற்பட்டதாம். சம்பள பாக்கியை கொடுக்காததால் ஒரு பாடலில் நடிக்க மறுத்தாராம் சிம்பு.

பணம்
சம்பள பாக்கியை செட்டில் செய்த பிறகே அந்த பாடலில் நடித்துக் கொடுத்தாராம் சிம்பு. இந்த சம்பவத்தை அடுத்து லைகா தயாரிப்பில் இனி நடிக்கவே கூடாது என்று சிம்பு முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

கமல்
இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதால் அதில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விலகினாராம் சிம்பு. செக்கச் சிவந்த வானம் வெற்றிக்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு
வந்தா ராஜாவாதான் வருவேன் படம் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிம்பு அரசியல் பேசுவதை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











