Simbu: கமல்ஹாசன் பர்த்டே பார்ட்டியில் மிஸ்ஸான சிம்பு... நேர்ல வாழ்த்து சொல்லலையே என்னாச்சு..?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று களைகட்டியது. தனது 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்து அசத்தினார் கமல்ஹாசன்.

இதில், சூர்யா, அமீர்கான், சிவராஜ்குமார், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால், கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில், தனது 48வது படத்தில் நடித்து வரும் சிம்பு பங்கேற்காதது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Simbu: Why Simbu did not attend Kamal Haasans birthday celebration?

கமல் பர்த்டே பார்ட்டியில் சிம்பு மிஸ்ஸிங்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், ரசிகர்களால் உலக நாயகன், ஆண்டவர் என பல பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 69வது பிறாந்தநாளை கொண்டாடிய கமல், திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்து அசத்தினார். இதில் கோலிவுட் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது கமல்ஹாசனுடன் அமீர்கான், சூர்யா, சிவராஜ்குமார், விஷ்ணு விஷால், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், குஷ்பு, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இதில், சிம்பு கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோவான சிம்பு, தற்போது STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார்.

சிம்புவின் STR 48 படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் கவனம் ஈர்த்த தேசிங்கு பெரியசாமி, STR 48-ஐ இயக்குகிறார். இந்தப் படம் குறித்த அபிஸியல் அப்டேட் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. பத்து தல வெளியாகும் முன்பே STR 48 படத்திற்காக தாய்லாந்து பறந்தார் சிம்பு. பின்னர் லண்டன் சென்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் உடல் உடையை குறைத்து, செம்ம எனர்ஜிட்டிக்காக போட்டோ ஷூட் நடத்தி வந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் பர்த்டே பார்ட்டியில் சிம்பு கலந்துகொள்ளவில்லை என்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்துகொண்டிருந்தார். அதன்பின்னர் கமல் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சிம்புவையும் பார்க்க நேரிட்டது.

ஆனால், முக்கியமான விழாவான கமல் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிம்பு கலந்துகொள்ளவில்லை. STR 48 படத்துக்காக சிம்பு தொடர்ந்து வெளிநாடுகளில் தான் பயிற்சி எடுத்து வருகிறார். அதனால் தான் கமல் பிறந்தநாள் விழாவுக்கு வர முடியவில்லையாம். ஏற்கனவே STR 48 படப்பிடிப்பு தாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால், அதற்கு தீவிரமாக ரெடியாகி வருகிறார் சிம்பு. அவரால் தான் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் ராஜ்கமல் தயாரிப்பில் SK 21 படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X