சிம்புவுக்கு வாய் ரொம்ப அதிகம்... பலமுறை அட்வைஸ் பண்ணி இருக்கேன்.. நடிகர் பிரித்விராஜ் பப்லு!
சென்னை: நடிகர் சிம்பு உடல் எடையை தாறுமாறாக குறைத்து அடுத்தடுத்து படங்களில் மிக தீவிரமாக நடித்து வருகிறார்
மாநாடு வெற்றி கொடுத்த உத்வேகத்தை தொடர்ந்து மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்திற்கு வெந்து தணிந்தது காடு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் பப்லு சிம்புவுக்கு வாய் ரொம்ப அதிகம் அடிக்கடி அட்வைஸ் கொடுப்பேன் என ஓபனாக பேசியுள்ளார்.

தடைகளையும் தாண்டி
கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் என்றுமே பெயர் போன நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று கல்லா கட்டியது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பல தடைகளையும் தாண்டி வெளியான மாநாடுக்கு பிறகு சிம்பு உடல் எடையை 50 கிலோ வரை குறைத்து நடித்து வருகிறார்

வெந்து தணிந்தது காடு
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சிம்பு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் வித்தியாசமான கதை களத்தில் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஆளே டோட்டலாக மாறி
அடிக்கடி கிசுகிசுக்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வந்த சிம்பு இப்பொழுது ஆளே டோட்டலாக மாறி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் பப்லு சிம்பு குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

வாய் ரொம்ப அதிகம்
அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ் பப்லு. இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். படங்களிலும் தோன்றும் பிரித்விராஜ் பப்லு சிம்பு உடல் எடையை குறைத்து உள்ளது மிகவும் வியப்பாக உள்ளது அதற்காக அவரை பாராட்டுகிறேன் ஆனால் அதே சமயம் உடம்பை கட்டுக்கோப்பாக அப்படியே மெயின்டெயின் செய்ய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் குண்டாகிவிடுவார் என பல முறை அட்வைஸ் செய்துள்ளேன். சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன் நான் என்ன சொன்னாலும் கேட்பார் வாய் ரொம்ப அதிகம் . என சிம்பு குறித்து பிரித்விராஜ் பப்லு பேசியுள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











