பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லான்ச்.. பத்து தல ராவணன் சிம்பு சிறப்பு விருந்தினர்

சென்னை: இன்று மாலை நடைபெறவிருக்கும் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்புவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். கல்கி எழுதிய இந்த நாவலானது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படும் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பல கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பொன்னியின் செல்வன் 2?

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பொன்னியின் செல்வன் 2?

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் முதல் பாகத்தில் இருந்த சிறு சிறு குறைகளை இந்தப் பாகத்தில் மணிரத்னம் நிவர்த்தி செய்வாரா என்ற மிகப்பெரிய கேள்வியும் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்கள் மத்தியில் இப்போதே எழ ஆரம்பித்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா


ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற அக நக பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்தப் பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாட இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார். இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. ட்ரெய்லரை காண ரசிகர்கள் பேரார்வத்துடன் இருக்கின்றனர்.

சிறப்பு விருந்தினராக உலக நாயகன்

சிறப்பு விருந்தினராக உலக நாயகன்

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் கலந்துகொண்டு ட்ரெய்லரையும், இசையையும் வெளியிடுகிறார். ட்ரெய்லரானது இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் பெர்பார்மன்ஸ் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று ரசிகர்களுக்கு பொன்னியின் செல்வன் ஃபீவர் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2வில் பத்து தல ராவணன்

பொன்னியின் செல்வன் 2வில் பத்து தல ராவணன்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் மற்றொரு சிறப்பு விருந்தினர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் சிம்பு இன்று மாலை நடைபெறவிருக்கும் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார். இது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சிம்பு பத்து தல படத்துக்கு பிறகு கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X