சிம்புவுக்கு ஸ்கெட்ச் போட்ட கமல்... சப்போர்ட்டுக்கு வந்த அனிருத்... இப்படியொரு சம்பவமா..?
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், பத்து தல டீசர் இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் இயக்குநர், தாயரிப்பாளர், இசையமைப்பாளர் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

எதிர்பார்ப்பில் பத்து தல டீசர்
சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் டீசர் இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகிறது. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதுகுறித்து நேற்றிரவு ட்வீட் செய்திருந்த சிம்பு, "பத்து தல டீசர் இப்போதுதான் பார்த்தேன். எல்லோரும் ஏஆர் ரஹ்மானின் சம்பவத்தை பார்க்க ரெடியாக இருங்கள்" என பதிவிட்டிருந்தார்.

அடுத்த பட அப்டேட்
ஏற்கனவே ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் பட்டையை கிளப்பியிருந்தது. இந்நிலையில், பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என சொல்லப்படுகிறது. அப்போது சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளாராம்.

கமலுடன் கூட்டணி
இதனையடுத்து சிம்பு - மிஷ்கின் காம்போ இணைவதாக செய்திகள் வெளியாகின. பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ள மிஷ்கின், விஜய்யின் லியோவில் வில்லனாகவும் ஆக்ஷன் பெர்ஃபாமன்ஸ் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சிம்புவின் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கூட்டணியும் இன்னும் உறுதியாகவில்லையாம். மேலும் அவருக்குப் பதிலாக தேசிங்கு பெரியசாமி சிம்புவின் படத்தை இயக்கவுள்ளாராம். முக்கியமாக இந்தப் படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல் - சிம்பு - அனிருத்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த இந்தப் படம், சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு பீரியட் கதை கூறியிருந்தார். ஆனால், இந்தப் படம் டேக்-ஆஃப் ஆகாததால், சிம்புவுக்காக கதை ரெடிசெய்துள்ளாராம் தேசிங்கு பெரியசாமி. இந்தப் படத்தை கமல் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளாராம். மேலும், அனிருத்தும் இக்கூட்டணியில் இணைந்ததாக சொல்லப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
விக்ரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில், கமல் - சிம்பு கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகும் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அது தற்போது உறுதியாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிம்புவுடன் முதன் முறையாக அனிருத்தும் இணைவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், கமல், சிம்பு, அனிருத், தேசிங்கு பெரியசாமி இணையும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











