சிம்புவுக்கு அந்த நடிகையுடன் விரைவில் திருமணம்?.. பச்சைக்கொடி காட்டிய டி.ஆர்!
சென்னை : சிம்புவுக்கு அந்த நடிகையுடன் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் , திருமணத்திற்கு சிம்புவின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டி உள்ளதாகவும் இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்து வேறலெவில் மாஸ் காட்டி வருகிறார் சிம்பு.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
2017ம் ஆண்டு வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இந்த படத்திற்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றும், அவர் வீட்டு மாடியில் ஷூட்டிங் நடத்தினாலும் சிம்பு வருவதில்லை என்றும் பல குற்றச்சாட்டுகளை AAA படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார்.

தோல்வியை தழுவியது
சிம்புவின் மோசமான செயலால்தான் படம் தோல்வியைத் தழுவியது என்றும் குற்றம்சாட்டி இருந்தார். அதற்கு ஏற்றால் போல சிம்புவும் எதிலும் ஈடுபாடு இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் மனஅழுத்தத்தில் இருந்தார். இதனால், சினிமா வட்டாரத்தில் இனி சிம்பு அவ்வளவு தான் என்ற பேச்சுக்கள் எழுந்தன.

மாநாடு மாஸ்
இதையடுத்து, சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட் கதையான ஈஸ்வரன் திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும், தீவிர உடற்பயிற்சி செய்து, இனிமேல் சிம்பு அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் வாய் பிளக்கும் அளவுக்கு சும்மா ஜம்முனு வந்து நின்றார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் மாஸ் காட்டி கலக்கி இருந்தார் சிம்பு.

சிம்புவுடன் காதல்
இந்நிலையில், ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலித்து வருவதாக சோஷியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. நிதி அகர்வால் தி நகரில் உள்ள எஸ்டிஆரின் வீட்டில் வசித்து வருவதாகவும், இருவரும் ஒன்றாக அந்த வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் பரவுகின்றன.

விரைவில் திருமணம்
சிம்பு வெந்து தணிந்தது காடு மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில பிஸியாக இருப்பதாகவும், அதேபோல நிதியும் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு படத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல் மாதம் தெலுங்கு படம் வெளியான பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு அவர்களது பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், ஒரு நல்ல நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. சிம்புவின் ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று பல தெய்வங்களை வேண்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











