சில நாட்களில் ரசிகர்களை சந்திக்கும் சிம்பு.. முக்கிய மீட்டிங்கிற்கு ஏற்பாடு.. கட்சி தொடங்குகிறாரா?
நடிகர் சிம்பு விரைவில் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: நடிகர் சிம்பு விரைவில் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ரசிகர்களை சந்திக்க உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
கடந்த வருடம் காவிரி பிரச்சனையின் போது நடிகர் சிம்பு அதுகுறித்து பேசி இருந்தார். கர்நாடக மக்கள், தமிழர்களுக்கு கிளாசில் தண்ணீர் கொடுத்து நட்பு வளர்க்க வேண்டும்.
நீங்கள் உங்கள் அன்பை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அவர் சொன்னது போலவே பெங்களூரில் பல கர்நாடக மக்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து வீடியோ வெளியிட்டனர்.

பேசி உள்ளார்
இது பெரிய வைரலானது. இது போல் அரசியல் தொடர்பாக பல கருத்துக்களை நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இவரின் கருத்துக்கள் சில சமயங்கள் மோசமான விமர்சனத்திற்கும் உள்ளாகி உள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு விரைவில் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

என்ன கட்சி
அதன்படி நடிகர் சிம்பு வெளிநாடு சென்ற போது இந்த திட்டத்துடன் சென்றார் என்று கூறுகிறார்கள். தற்போது வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்திருக்கும் சிம்பு இன்னும் சில நாட்களில் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். இதற்காக தமிழகம் முழுக்க இருக்கும் சிம்பு ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு செல்ல இருக்கிறது.

மீட்டிங்
ரசிகர் மன்றத்தை எப்படி பலப்படுத்துவது என்று இதில் ஆலோசிக்க இருக்கிறார்களாம். அதேபோல் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும். மக்களுக்கு சேவைகளை எப்படி செய்வது என்றும் இதில் பேச இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

என்ன வருவார்
இதில் சிம்பு கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பாரா என்று தகவல் வெளியாகவில்லை. ஆனால் அரசியல் தொடர்பாக சிம்பு தனது ரசிகர்களிடம் பேசுவார். தன்னுடைய அடுத்த படங்கள் குறித்தும் இவர் தன்னுடைய ரசிகர்களிடம் அறிவிப்பார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











