சிம்புவோடு ஷூட்டிங்கில் மணிரத்னம்... செம வைரலாகும் புகைப்படம்!
Recommended Video

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, சிம்பு என பலரும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சந்தோஷ் சிவன் ஷேர் செய்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னமோடு சிம்பு இருக்கும் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்பு
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் மெகா தோல்வி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகார், ஞானவேல் ராஜாவின் கிண்டல் பேச்சுகள் என பல சர்ச்சைகளைத் தாண்டி சிம்பு மீண்டும் எடை குறைத்து சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

மணிரத்னம் படம்
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் செம வெய்ட் போட்ட சிம்பு அதன் பின்பு மணிரத்னம் படத்தில் கமிட் ஆனார். கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் எந்த சர்ச்சைகளிலும் பங்குபெறாமல், சைலன்ட் மோடில் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் அவரது ஜிம் வொர்க் அவுட் வீடியோ ஒன்று வெளியானது.

செக்கச் சிவந்த வானம்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, சிம்பு என பலரும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் மணிரத்னத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திறமையான நடிகர்கள் தேர்வு
அர்ப்பணிப்புமிக்க நடிகர்களுடன் இயக்குநர் மணிரத்னம் வளர விரும்புகிறார் என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார். அதில், ''சுவாரசியமான நடிகர்களின் கலவை இப்படம். இயக்குநர் மணிரத்னம் அர்ப்பணிபுமிக்க திறமையான, நேரம் தவறாத நடிகர்களுடன் வளர விரும்புகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
வைரலாகும் புகைப்படம்
'செக்கச் சிவந்த வானம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சந்தோஷ் சிவன் ஷேர் செய்துள்ளார். மணிரத்னம் வெளியில் இருக்க, சிம்பு காருக்குள் இருக்கும் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











