எல்லாம் வதந்தி, என் படத்துல ‘சிம்பு’ மட்டும் பாட்டெழுதல... : ‘பசங்க’ பாண்டிராஜ் மறுப்பு
சென்னை: தனுஷ் நடிப்பதாக இருந்த படத்தில் சிம்பு நடிக்கிறார், குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என 'பசங்க' பாண்டிராஜின் அடுத்த படம் பர்றி இப்போதே அனைவரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
படத்தின் பாடல்களை சிம்புவே எழுதுகிறார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் செய்திகள் உலா வந்த நேரத்தில், எதற்குமே வாய் திறக்காத பாண்டிராஜ் முதன் முறையாக இப்படம் குறித்து மனம் திறந்திருக்கிறார்.
ஆனாலும், அவரின் பேச்சு இலை மறை காயாகத் தான் சேதி சொல்கிறது...

ராஞ்ச்னாவால் நழுவிய வாய்ப்பு...
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்குப் பிறகு, பாண்டிராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் நாயகன் என செய்திகள் உறுதிப்படுத்திய நேரத்தில் ஹிந்தியில் ‘ராஞ்ச்னா' ரிலீஸ் ஆகியது. அதனால் தனுஷின் கவனம் ஹிந்தி பக்கம் சாய, பாண்டிராஜின் படத்தில் சிம்பு என பேச்சு அடிபடத்தொடங்கியது.

குறளின் இசையில்...
லண்டன் சென்றிருந்த சிம்பு சென்னை திரும்பியதும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. நாயகனாக அறிமுகம் ஆவார் என எதிர்பார்த்த சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என தெரிவிக்கப்பட்டது.

சாம்பிள் பாடல்கள்...
மேலும், படத்தின் பாடல்களை சிம்புவே எழுத இருக்கிறார், சில பாடல் சாம்பிள்களும் லண்டனில் இருந்தபடியே எழுதி அனுப்பி விட்டார் என பரவும் செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பாண்டிராஞ் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

ஆடி போய் ஆவணி வரட்டும்...
அதில், ‘எனது புதிய படத்தின் தலைப்பு மற்றும் பிற விஷயங்கள் அதாவது யார் பாட்டெழுதுவது, இசையமைப்பது என்பது குறித்து ஆடி மாதத்திற்குப் பிறகு தான் முடிவு செய்யப்படும். ஆகஸ்ட் மாதம் 15 தேதிகளுக்குப் பிறகு பட விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.

எல்லாம் வதந்தி...
அதற்கு முன் பரவும் எல்லா விஷயங்களும் வதந்திகளே. அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. மேலும் , நான் உறுதியாகச் சொல்கிறேன், என் படத்தில் மிகப் பிரபலமான பாடலாசிரியர்கள் பாட்டெழுத இருக்கிறார்கள். சிம்பு மட்டுமல்ல...

எதுவுமே ஆரம்பிக்கல....
இன்னும் பாட்டெழுதும் வேலையோ, இசையமைக்கும் வேலையோ தொடங்கப்பட வில்லை என்பதை உறுதியாக்ச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.


Click it and Unblock the Notifications