'ஒஸ்தி வந்துட்டான்டா...' - வைரலாக பரவும் சிம்பு வீடியோ!
Recommended Video

சென்னை : முன்பு உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்ட சிம்பு, சமீப சில படங்களில் எக்குத்தப்பாக வெயிட் போட்டு நடித்திருந்தார்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் கொஞ்சம் குண்டானவர், 'AAA' படத்தில் தொப்பையுடன் காட்சியளித்ததால் நெட்டிசன்ஸ் கலாய்த்து தள்ளினர்.
இந்நிலையில், சிம்பு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இப்போது ஓரளவுக்கு எடையைக் குறைத்துவிட்டார் சிம்பு.

சிம்பு
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் மெகா தோல்வி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகார், ஞானவேல் ராஜாவின் கிண்டல் பேச்சுகள் என பல சர்ச்சைகளைத் தாண்டி சிம்பு தனது பயணத்தை நல்ல விதத்தில் மேற்கொண்டிருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது நேற்று வெளியான சிம்பு வொர்க்-அவுட் வீடியோ.

தொப்பையுடன் சிம்பு
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் குண்டாக தெரிந்த சிம்பு, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் தொப்பையுடன் வலம் வந்தார். முகப் உப்பி, உடல் எடை அதிகரித்து ரசிகர்களே கலாய்க்கும் அளவிற்கு உடலை அதன் போக்கிற்கு விட்டார்.
மணிரத்னம் படத்துக்கு
ஆனால், அதன்பின் மணிரத்னம் படத்தில் கமிட் ஆன சிம்பு, கடந்த சில நாட்களாக பெரும்பாலும் எந்த சர்ச்சைகளிலும் பங்குபெறாமல், சைலன்ட் மோடில் இருந்தார். இந்த நிலையில், நேற்று அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
செம வைரல்
அந்த வீடியோவில், ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிறார் சிம்பு. தொப்பையைக் குறைத்துவிட்டேன்... இன்னும் உடலை வலுவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை அந்த வீடியோ மூலம் உணர்த்தியிருக்கிறார் சிம்பு. இப்போது அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











