திரைத் துளி
அஷ்டாவதானி (சில நேரங்களில் நமக்கு கஷ்டாவதானி!) டி.ராஜேந்தரின் செல்லப் புத்திரன் சிலம்பரசன் அவ்வப்போது அப்பாவின் படங்களில் டான்ஸ் ஆடுவது,சண்டை போடுவது, பாடுவது என தலை காட்டிக் கொண்டிருக்கிறார்.
அவரை முழு நேர ஹீரோவாகப் போட்டு படம் எடுக்கும் முயற்சியிலும் டி.ஆர். வெற்றி பெற்றுவிட்டார். இளம் கதாநாயகி ஒருவருடன் தற்போது டூயட்பாடிக் கொண்டிருக்கிறார் சிலம்பரசன்.
இந்நிலையில் தன் அப்பாவின் இசையில் மட்டுமே முன்பு பாடிய சிலம்பரசன், தற்போது தேவா இசையில் முதன் முதலாகப் பாடியுள்ளார்.
அந்தப் பாட்டின் முதல் இரண்டு வரிகளுமே புல்லரிக்க வைக்கின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க (?) அந்த பாடலின் வரிகள் இதோ...
""சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?...""
"என்ன விலை அழகே" என்ற படத்திற்காக இந்த பாடலை சிலம்பரசன் பாட, பரவசத்துடன் அதற்கு இசையமமைத்துள்ளார் தேவா.
"சும்மா சொல்லக் கூடாது. சிலம்பரசன் நன்றாகவே பாடியுள்ளார்" - சிலாகித்துச் சொல்கிறார் தேவா.


Click it and Unblock the Notifications











