Fire: என்னய்யா இயக்குநர் நீ.. ஃபயர் படம் குறித்து கருத்து சொன்ன டிராஜேந்தர்!
சென்னை: ஜே எஸ் கே சதீஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் 'ஃபயர்'. இத்திரைப்படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ், ரச்சித்தா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பார்த்த இயக்குநரும் நடிகருமான டிராஜேந்தர் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.
ஃபயர் திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இருந்து முன்னதாக மெது மெதுவாக பாடல் வெளியாகிய மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலைப்பார்த்த பலர், இந்த திரைப்படம் ஒரு ஆபாசமான திரைப்படமாக இருக்கும் என்று கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இந்த படம் நேற்று தியேட்டரில் வெளியாகிய பெண்கள் உட்பட அனைவரும் இந்த திரைப்படத்தை பார்த்து வேகமாக பாராட்டி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல ஒரு மெசேஜை இயக்குனர் சொல்லி இருக்கிறார். பெண்கள் யாரை நம்ப வேண்டும், பெண்கள் யாரை நம்ப கூடாது, எந்த இடத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அனைத்தையும் சொல்லி இருக்கிறார். பெண்களை காதலித்து ஏமாற்றும் ஆண்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என படம் பார்த்த பல பெண்கள் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் வரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே கவர்ச்சியாக இருக்கிறது. இதனால் இந்த திரைப்படத்தை பெற்றோர்களுடன் குடும்பத்தோடு வந்து பார்க்க முடியாது. ஆனால், இதுபோன்ற கருத்துள்ள படத்தை பெற்றோர்களுடன் சேர்ந்து பார்த்தால், அவர்களுக்கும் ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது தெரியும் என்றனர்.
இப்படி ஃபயர் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்திரன் படத்தை வெகுவாக பாராட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ஃபயர் என்கின்ற படத்தின் டைட்டிலே ஃபயரா இருக்கிறது. பெற்ற பெண்களை சும்மா செல்லம் கொடுத்து, செல்போனை கொடுத்து, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்து விடக்கூடாது. இந்த உலகம் என்றால் என்ன? நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால்? பாலியலின் கொடுமை என்றால் என்ன? என எல்லாத்தையும் சொல்லி பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இதை சொல்லி வளர்க்கவில்லை என்றால், பல பெண்களை இழந்து விடுவோம். பல பெண்களை தாய் தந்தையர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மெசேஜை சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் ஜே எஸ் கே சதீஷ் அவருக்கு என் பாராட்டுக்கள் என கூறியுள்ளார் டி ராஜேந்தர்.
ஃபயர் திரைப்படம்: படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால், தமிழகத்தில் படம் ஒரே நாளில் 20 லட்சத்தை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைத்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மேலும் ஃபயர் திரைப்படம் நேற்று 11 தியேட்டர்களில் மட்டுமே வெளியான நிலையில், படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், இன்று பல தியேட்டர்களில் ஃபயர் படத்தை வெளியிட்டன.


Click it and Unblock the Notifications











