Bhavatharini: கடைசியா சிம்பு படத்துக்கு பாடிய பவதாரிணி.. அந்த இன்னசன்ஸ் குரல்.. சிம்பு உருக்கம்!

சென்னை: இளையராஜாவின் மகளும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி திடீரென புற்றுநோய் பாதிப்புக் காரணமாக உயிரிழந்தது திரைத்துறையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்பு தனது படத்திற்கு பவதாரிணி பாடிய பாடல் காட்சிகளை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு, கங்கை அமரன், உதயநிதி ஸ்டாலின், சீனு ராமசாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து இன்று சென்னைக்கு பவதாரிணியின் உடல் கொண்டு வரப்பட உள்ளது. #Bhavatharini ஹேஷ்டேக்கில் பல ரசிகர்கள் அவர் பாடிய அருமையான பாடல்களை பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Simbus heart broken after heard about Bhavatharini sudden demise

பவதாரிணி மறைவு: 47 வயதான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இலங்கையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கங்கை அமரன் கண்ணீர்: "எங்களை எல்லாம் விட்டுப்போன எங்கள் இளம் தேவதையே.. என்றும் எங்கள் வாழ்வோடு நீ இரு ..!!!" என சித்தப்பா கங்கை அமரன் மகள் உயிரிழந்த துயரத்தில் கண்ணீர் விட்டு போட்டுள்ள பதிவு அனைவரையும் உருக்கி உள்ளது.

சிம்பு உருக்கம்: பவதாரிணியின் அந்த இன்னசன்ஸ் கலந்த குரல் என்றுமே அனைத்து மக்கள் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும். இவ்வளவு சீக்கிரம் போயிடுவாருன்னு கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இளையராஜா சார் குடும்பத்தினருக்கு இந்த மனவலியை தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் என்னுடைய ஆறுதலை கூறிக் கொள்கிறேன் என நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடைசி படம் மாநாடு: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடிய "மெஹரசைலா" பாடலை கடைசியாக பவதாரிணி பாடியது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் காட்சிகளை வெளியிட்டு நடிகர் சிம்பு ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X