நான் செய்த தவறு.. அமரன் படம் பார்த்துவிட்டு சிம்பு பட இயக்குநர் சொல்லியிருப்பதை பாருங்க
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படம் கடந்த 31ஆம் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் அயலான் திரைப்படம் பல வருடங்கள் கழித்து வெளியானாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முக்கியமாக குழந்தைகளை ரொம்பவே ஈர்த்ததால் போட்டிக்கு களமிறங்கிய தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது அயலான். வரிசையாக இரண்டு படங்களும் ஹிட்டடித்திருப்பதால் எஸ்கேவும், அவரது ரசிகர்களும் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அமரன்: சூழல் இப்படி இருக்க ரங்கூன் படத்தை இயக்கி வெகுவாக கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். கமலின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமியின் மேக்கிங் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கிறது.
முகுந்த் வரதராஜன்: இப்படமானது இந்திய ராணுவத்தில் பணியாற்றி சண்டையின்போது வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. அதன் காரணமாகவும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஹைப் எகிறியது. படமானது பான் இந்தியா அளவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸானது.
பாசிட்டிவ்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் சூப்பர் வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சிவா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு கொண்டாடப்படுகிறது. அதிலும் சாய் பல்லவி மிகச்சிறப்பாக ஸ்கோர் செய்துவிட்டார். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் சிம்புவை வைத்து படம் இயக்கவிருக்கும் அஸ்வத் மாரிமுத்து அமரன் படம் பற்றி போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார்
அஸ்வத்தின் போஸ்ட்: அவர் தனது எக்ஸ் தளத்தில், "நான் ராணுவத்துக்கு செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள். என்னுடைய எட்டாம் வகுப்பில் நான் சைனிக் பள்ளி நுழைவு தேர்வில் வெற்றி பெற்றேன். இருந்தாலும் பயம் காரணமாக அதில் சேர்ந்து படிக்கவில்லை. இப்போது அமரன் படம் பார்த்து, நான் செய்தது தவறு என உணர்கிறேன். அந்தப் பள்ளியில் நான் படித்திருக்க வேண்டும். மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை ஒரு வீர காவியம். சிவா அதனை முழுமையாக்கியிருக்கிறார். சாய் பல்லவி போன்று படத்தின் தொடக்கத்தில் நானும் அழுதேன். கடைசியில் அவர் தனது அழுகையை கட்டுப்படுத்தியதுபோல் நானும் செய்தேன். இயக்குநர் எல்லா துறையிலும் சிறப்பு செய்திருக்கிறார். அவரை கொண்டாட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











