இதுதாங்க ‘ஹனி’க்கு சிம்புவோட பிறந்தநாள் பரிசு...
சென்னை: இன்று தனது 22வது பிறந்தநாளைக் கொண்டாடும் தனது வருங்கால மனைவியாகப் போகும் ஹன்சிகாவிற்கு என்ன பரிசு தரலாம் என மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார் சிம்பு. இதனால், சிம்புவின் பிராந்தநாள் பரிசு என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்களும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அழகிய பிரின்சஸ் கேக் ஒன்றை ஹன்சிகாவுக்கு அனுப்பியுள்ளாராம் சிம்பு. அதில் 'ஹேப்பி பர்த் டே பிரின்சஸ்' என்ற வார்த்தைகள் எழுதப் பட்டுள்ளது.

பிரின்சஸ் கேக்...
அழகிய கேக் போட்டோ ஒன்றை ட்வீட்டரில் போட்டு அதற்குக் கீழே தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை எழுதியுள்ளார் சிம்பு.

நலம் வாழ எந்நாளும்...
இந்த நாள் உனக்கு மீண்டும் மீண்டும் வரட்டும் பிரின்சஸ்... கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும், ஐ லவ் யூ ' என வார்த்தைகளால் காதலைக் கொட்டியிருக்கிறார் சிம்பு.

அழகான காதல் பரிசு....
சிம்புவின் இந்தக் காதல் பரிசுக்கு ஹன்சிகா, ‘பின்னர் சொல்கிறேன் எல்லாவற்றையும் உனக்கு.... மிகவும் அழகான, காதலுடன் கூடிய பரிசு இது....' பதில் அனுப்பியிருக்கிறார் ட்வீட்டரில்.

நன்றி... நன்றி... நன்றி...
மேலும், ரசிகர்களின் அன்புக்கும், தனது இனிய குடும்பத்தாருக்கும் நன்றிகள் தெரிவித்துள்ளார் ஹன்சிகா. சிம்பு தவிர திரைத்துறையில் இருந்து கார்த்திகா, சிம்ரன் மற்றும் உதயநிதி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர் ட்வீட்டர் வாயிலாக...
‘ஹனி’க்கு சிம்புவோட பிறந்தநாள் பரிசு...
இதுதாங்க ‘ஹனி'க்கு சிம்புவோட பிறந்தநாள் பரிசு...


Click it and Unblock the Notifications











