படத்தை ஹிட்டாக்க கொடூர பலாத்கார காட்சியை வைத்தேனா?: வெற்றி இயக்குனர் விளக்கம்

By Siva

மும்பை: என் படத்தை ஓட வைக்க பலாத்கார காட்சி தேவையில்லை என்று பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்த சிம்பா படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் தொடர்ந்து 8 படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளன.

படம் தியேட்டர்களில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

காட்சி

காட்சி

சிம்பா படத்தை ஓட வைக்க அதில் பலாத்கார காட்சியை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு ஊழல் போலீஸ் அதிகாரி தனது இமேஜை சரி செய்ய பலாத்கார காட்சியை பயன்படுத்தியுள்ளார் ரோஹித் ஷெட்டி என்று படத்தை பார்த்தவர்கள் விளாசியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து ரோஹித் விளக்கம் அளித்துள்ளார்.

ரோஹித் ஷெட்டி

ரோஹித் ஷெட்டி

பலாத்கார காட்சியை பல படங்களில் காட்டியுள்ளனர். என் படத்தில் ஒன்றும் முதன்முதலாக காட்டவில்லை. இது ஒரு கமர்ஷியல் விஷயம், இதை மக்கள் வேறு மாதிரியாக யோசிக்கிறார்கள். படத்தை பார்த்தால் அந்த காட்சி திணிக்கப்பட்டது அல்ல என்பது புரியும். சென்சாரில் ஒரு இடத்தில் கூட சிம்பாவுக்கு கத்தரி போடவில்லை என்கிறார் ரோஹித்.

விளக்கம்

விளக்கம்

என் கெரியரில் தற்போது நான் இருக்கும் இடத்தில் பலாத்கார காட்சியை பயன்படுத்தி தான் என் படத்தை ஓட வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலாத்காரம் செய்பவரை கொலை செய்வது பற்றி போலீசார் விவாதிக்கும் காட்சியை வைத்துள்ளேன். இது என் கருத்து, இயக்குனரின் கருத்து என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.

டெம்பர்

டெம்பர்

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான டெம்பர் படத்தின் இந்தி ரீமேக் தான் சிம்பா. ரோஹித் ஷெட்டி படங்களை விமர்சகர்கள் விளாசினாலும், ரசிகர்கள் கண்டமேனிக்கு கலாய்த்தாலும் படம் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X