For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் நடிச்சுகிட்டே தான் இருப்பேன்... விளம்பரம் இல்லாமல் பட்டையை கிளப்பும் சமுத்திரக்கனி

  |

  சென்னை : தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. கொரோனா அச்சம் காரணமாக பல படங்களின் படப்பிடிப்புக்கள் மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது. தியடே்டர்கள் எப்போது திறக்கப்படும் என தெரியாததால் பல படங்கள் ஓடிடி.,க்கு செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே முடங்கி கிடக்கின்றன.

  ஆனால் தமிழ், தெலுங்கு என படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் டைரக்டரும், நடிகருமான சமுத்திரக்கனி. தனக்கு கிடைப்பது சிறிய ரோலாக இருந்தாலும், ரசிகர்கள் மனதில் நச்சென்று பதிவது போல் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சட்டம் படித்தவரான சமுத்திரக்கனிக்கு நடிகராக வேண்டும் என்பது கனவு. ஆனால் அவரால் நடிகராக முடியாது என பலர் கூறினர். அதனையும் மீறி நடிகராகியே தீர வேண்டும் என்ற நினைப்புடன் சினிமா உலகிற்குள் அசிஸ்டென்ட் டைரக்டராக நுழைந்தார்.

  8 புதிய கதையம்சமுள்ள, பிரமாண்டமான படங்கள்...அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய முயற்சி8 புதிய கதையம்சமுள்ள, பிரமாண்டமான படங்கள்...அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய முயற்சி

  டைரக்டராக முத்திரை பதித்த சமுத்திரக்கனி

  டைரக்டராக முத்திரை பதித்த சமுத்திரக்கனி

  கே.விஜயன், கே.பாலச்சந்தர் ஆகியோரிடம் படங்கள், டிவி சீரியல்கள் என பலவற்றில் பணியாற்றிய சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தின் மூலம் டைரக்டரானார். அது பிளாக் பஸ்டர் படமானதை தொடர்ந்து, சமூகத்திற்கு ஏதாவது ஒரு மெசேஜை சொல்லும் விதமாக போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்களை இயக்கி வெற்றியும் கண்டார். இந்த படங்கள் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டன.

  கனவை நினைவாக்கிய பார்த்தாலே பரவசம்

  கனவை நினைவாக்கிய பார்த்தாலே பரவசம்

  டைரக்டராக தான் வெற்றி பெற்றாலும் நடிப்பின் மீது கொண்ட தீராத காதலால் சிறிய ரோல் கிடைத்தால் விடாமல் நடித்து அசத்தி வந்தார். பார்த்தாலே பரவசம் படத்தில் நோயாளியாக நடித்து கேமிரா முன் முகம் காட்டினார். தொடர்ந்து பருத்திவீரன், பொய், சுப்ரமணியபுரம், சம்போ சிவ சம்போ என வரிசையாக படங்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

  பிஸியான நடிகரான சமுத்திரக்கனி

  பிஸியான நடிகரான சமுத்திரக்கனி

  சுப்ரமணியபுரம் படத்திற்கு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராகி விட்ட சமுத்திரக்கனி வருடத்திற்க 10 படங்களில் நடித்து வருகிறார். 2021 ல் இதுவரை 13 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் தெலுங்கில் இவர் நடித்த கிராக் படம் செம ஹிட் ஆனது.

  டிவி.,யில் ரிலீசாகும் படங்கள்

  டிவி.,யில் ரிலீசாகும் படங்கள்

  அதற்கு பிறகு நடித்த ஏலே, புலிக்குத்தி பாண்டி, சங்க தலைவன், வெள்ளை யானை போன்ற படங்கள் வரிசையாக சன் டிவி, விஜய் டிவி ஆகியவற்றில் திரையிடப்பட்டு வருகிறது. தலைவி, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

  பிற மொழிகளிலும் பிஸி

  பிற மொழிகளிலும் பிஸி

  மலையாளத்தில் 2 டேஸ், தெலுங்கில் ஆகாசவானி, ஆர்ஆர்ஆர், தமிழில் இந்தியன் 2, அந்தகன், டான் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிசிலும் நடித்துள்ளார்.

   நடிப்பின் மீதான காதல்

  நடிப்பின் மீதான காதல்

  படங்களில் நடிப்பது மட்டுமல்ல டப்பிங் பேசுவது, பின்னணி பாடுவதையும் செய்துள்ளார் சமுத்திரக்கனி. அவ்வப்போது படங்கள், டிவி சீரியல்களையும் இயக்கி வருகிறார். தான் நடிக்கும் படங்கள் ஓடிடி, டிவி என எதில் ரிலீஸ் செய்தாலும் அதை இமேஜ் பிரச்சனையாக நினைக்காமல் தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார் சமுத்திரக்கனி.

  KANGANA முன்னாடி நடிக்க பயமா இருக்கும் |Actor Samuthirakani | Thalaivi Pressmeet| Filmibeat Tamil
  வேற லெவல் சார் நீங்க

  வேற லெவல் சார் நீங்க

  வில்லன், குணசித்திரம், சிறப்பு தோற்றம் என எந்த ரோலுக்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டு முத்திரை பதித்து வருகிறார் சமுத்திக்கனி. இது நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் தீராத காதலையே காட்டுகிறது.

  English summary
  Samuthirakani is too busy in his acting carrier. Now he is busy not only in tamil films, telugu and malayalam also. From the begining of 2021, still he is acting in more than dozen films.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X