ரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா!!
Recommended Video

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் சிம்ரனும் உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

சிம்ரன்
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. தன் மகள்களை விட சிறு வயது நடிகைகளுடன் டூயட் பாடியது தவறு என்று காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்தார். இந்நிலையில் சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நீலாம்பரி
சிம்ரன் நடிக்கிறார் ஆனால் ரஜினி ஜோடியாக இல்ல என்றும் கூறப்படுகிறது. படையப்பா படத்தில் வந்த நீலாம்பரி போன்று வலுவான கதாபாத்திரம் சிம்ரனுடையது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

சந்திரமுகி
சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் கர்ப்பமாகிவிட்டதால் அவருக்கு பதில் ஜோதிகாவை நடிக்க வைத்தனர். இந்நிலையில் அவர் ரஜினி படத்தில் நடிக்க உள்ளார்.

செகண்ட் இன்னிங்ஸ்
குழந்தைகள், குடும்பம் என்று செட்டிலான சிம்ரன் செகண்ட் இன்னிங்ஸில் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரஜினியின் படம் நிச்சயம் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











