ராதையாக மாறிய டிடி.. ரொம்ப அழகா இருக்கீங்க என பாராட்டிய சூப்பர் ஜோடி.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடியின் புகைப்படத்தை நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை சிம்ரன் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற டிடி பிகினியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், தற்போது ராதை போல வேடமிட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

ராதை டிடி
பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக விஜய் டிவியில் கலக்கி வருபவர் டிடி எனும் திவ்ய தர்ஷினி. சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு டிரெண்ட் செய்வதும் வழக்கம். இந்நிலையில், தற்போது ராதை போல அலங்காரம் பண்ணிக் கொண்டு டிடி போட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.

தொடர்ச்சியாக வருமா
சேலை அணிந்து கிருஷ்ணனின் ராதாவாகவே மாறியபடி செம க்யூட்டான போட்டோஷூட் நடத்தியுள்ள டிடி, ராதா சீரிஸ் என குறிப்பிட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட போட்டோக்கள் இனி ரசிகர்களுக்காக தொடர்ச்சியாக வரும் என்றே தெரிகிறது. இப்ரஹிம் என்பவர் மேக்கப் போட கிருஷ்ணா ரோஸ்டி எனும் புகைப்படக் கலைஞர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

சிம்ரன் பாராட்டு
டிடி நீலகண்டனின் இந்த கருப்பு வெள்ளை ராதா போட்டோவை பார்த்த நடிகை சிம்ரன், ரொம்ப அழகா இருக்க.. எவர்க்ரீன் கார்ஜியஸ் டிடி என சிகப்பு நிற ஹார்ட்டீன் எமோஜிகளையும் பதிவிட்டு பாராட்டி தள்ளி உள்ளார். சிம்ரன் மட்டுமின்றி அவருடைய ஜோடி நடிகரும் டிடியை இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு வர்ணித்து தள்ளியுள்ளார்.

டைம்லெஸ் பியூட்டி
தொகுப்பாளினி டிடியின் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் பிரசாந்த் டைம்லெஸ் பியூட்டி, லுக்கிங் ஸ்டன்னிங், கிரேட் ஷாட் என வர்ணித்து தள்ளி உள்ளார். அந்தகன் படத்தில் மீண்டும் சிம்ரன் உடன் இணைந்து நடித்து வரும் நடிகர் பிரசாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் ஜோடி போட்டு டிடியை பாராட்டி உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிகினி உடையில்
23 வருடங்கள் உழைப்புக்கு பிறகே இப்படியொரு பிகினி போட்டோவை போடுகிறேன் என சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற டிடி நீலகண்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட போட்டோவும் கேப்ஷனும் வேற லெவலில் சோஷியல் மீடியாவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அழகு ராதாவாக ரசிகர்களை கவர உள்ளார் டிடி.


Click it and Unblock the Notifications











