Just In
- 2 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 14 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 1 hr ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- News
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாளை தரிசித்த கையோடு ஸ்டாலினுக்கு எதிராக அனலை கக்கிய முதல்வர்
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கிறாரா..? பிரபல நடிகை சிம்ரன் விளக்கம்!
சென்னை: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக, வந்த தகவலை பிரபல நடிகை மறுத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற படம் சந்திரமுகி. இதில் நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினீத், நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.
அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்!

வடிவேலு காமெடி
2005-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது. வடிவேலுவின் காமெடியும், ரஜினியின் வேட்டையன் கேரக்டரும், ஜோதிகாவின் நடிப்பும் பாடல்களும் இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயங்களாக இருந்தன. இந்தப் படத்தில் வடிவேலு காமெடி இப்போதும் பேசப்படுவதாக இருக்கிறது.

890 நாட்கள்
சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் இந்தப் படம் 890 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். படத்தை பி.வாசு இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்காக, தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்திலிருந்து 3 கோடி ரூபாயை, கொரோனா நிவாரணத்துக்கு வழங்கி இருந்தார் லாரன்ஸ்.

நடிகை ஜோதிகா
இந்நிலையில் இந்தப் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா என்று நடிகை ஜோதிகாவிடம் கேட்டபோது, தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார். அதோடு, சந்திரமுகி கேரக்டரில் உங்களுக்கு பதில் வேறு எந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கேட்டதற்கு, நடிகை சிம்ரனைக் கூறியிருந்தார் ஜோதிகா.

அணுகவில்லை
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்ரன் நடிப்பதாக செய்திகள் வெளியானது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் போய் கொண்டிருந்த இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார், நடிகை சிம்ரன். 'அது பொய்யான செய்தி. அந்த படத்துக்காக யாரும் என்னை அணுகவில்லை. செய்தியை வெளியிடும் முன், அது சரியானதுதானா என்று சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.