ரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா?
Recommended Video

சென்னை:கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரஜினியும், விஜய் சேதுபதியும் முதல்முறையாக இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேல் தன் மகள்களின் வயது அல்லது அவர்களை விட வயது குறைவான நடிகைகளுடன் டூயட் பாட மாட்டேன் என்று ரஜினி தெரிவித்திருந்தார்.
அவர் பேச்சை அவர் காப்பாற்றிவிட்டார். ஆம், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சின்னப் புள்ளைகள் இல்லை சீனியரான சிம்ரன் நடிக்கிறார். இதை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கியும் நடிக்கிறார் என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நவாஸுத்தீன் சித்திக்கி தான் வில்லனாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மீண்டும் நடிக்க வந்த பிறகு சரியான பிரேக் கிடைக்காமல் சிம்ரன் அல்லாடுகிறார். இந்நிலையில் இந்த படம் அவருக்கு கை கொடுக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலா படம் ஈஸ்வரி ராவுக்கு கை கொடுத்தது போன்று சிம்ரனுக்கு இந்த படம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











