திரைத்துறையில் சோகம்.. சிம்ரன், ஜோதிகா, சாய் தன்ஷிகாவின் மேனேஜர் அருண் மரணம்

சென்னை: 90களின் இறுதி மற்றும் 2000களில் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகைகளாகவும் முன்னணி நடிகைகளாகவும் விளங்கியவர்கள் என்றால் அது ஜோதிகாவும், சிம்ரனையும் கூறலாம். இவர்களில் சிம்ரன் சீனியர் நடிகை என்றாலும் சிம்ரனுக்கு டஃப் கொடுத்து வந்தார் ஜோதிகா. இவர்கள் இருவருக்கும் மானேஜராக பணியாற்றிய அருண் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் ஜோதிகா, சனாகான், சிம்ரன், விந்தியா, சாய் தன்ஷிகா ஆகிய ஹீரோயின்களுக்கு கால்ஷீட் மேனேஜராகப் பணியாற்றி உள்ளார். உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மறைவு குறித்த செய்திகள் திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சாய் தன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அனைத்திற்கும் நன்றிகள் மாமா உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார். அவரது மறைவு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் ஜோதிகா மற்றும் சிம்ரனுக்கு அவர்கள் பீக்கில் இருந்த போது மேனேஜராக இருந்தார். அதன் பின்னர் அவர்கள் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியதால், அவர்களிடம் இருந்து வெளியேறினார்.

Simran Jyothika Jyothika Manager Arun Death

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X