»   »  மகனுடன் களம் இறங்கும் சிம்ரன்!

மகனுடன் களம் இறங்கும் சிம்ரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்லிம் சிம்ரன் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்பது பல முறை கேட்ட, படித்த செய்தி. சமீபத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாராவில் நடித்துவிட்டு ஏண்டா இந்த படத்தில் நடித்தோம்? என ஃபீல் பண்ணியவர் சிலகாலம் ஒதுங்கியிருந்தார்.

இப்போது ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த விளம்பரப் படத்தில் சிம்ரனுக்கு மகனாக அவரது சொந்த மகன் அதீப்பே நடித்திருக்கிறாராம்.

Simran launches her son

பைலட்டான தீபக் பாகாவை திருமணம் செய்து ஒதுங்கிய சிம்ரன் சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும், ஹோட்டலையும் தொடங்கினார். ஹோட்டல் சரியாக போகவில்லையாம்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தானே ஹீரோயினாக நடிப்பதற்காக கேட்ட கதைகள் எதுவுமே செட் ஆகவில்லை. எனவே நொந்துபோயிருந்த சிம்ரனுக்கு இந்த விளம்பரமாவது ஆறுதலாக அமையட்டும்!

English summary
Simran is introducing her son Adheep through an ad film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil