முதலமைச்சரான குட்டியை சந்தித்த ருக்கு.. அடடே இவங்க காம்பினேஷன்ல இன்னொரு படம் வந்திருக்கலாம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நடிகையும் முதலமைச்சரின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தோழியுமான சிம்ரன் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் சென்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த அவர், " சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் நமது முதலமைச்சர் விஜய்யை எனது குடும்பத்துடன் சந்தித்தேன். கோடிக்கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்த அந்த அன்பும் பணிவும் பொறுப்பும் இன்னும் அவரிடத்தில் அப்படியே உள்ளது. நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பேரார்வமும் தொலைநோக்குப் பார்வையும் வியக்க வைக்கிறது. அவர் தமிழ்நாட்டை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் இவ்வேளையில், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மற்றும் சிம்ரன் இணைந்து ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் ( இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்) துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே மற்றும் உதயா என ஐந்து படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். இதையடுத்து யூத் படத்தில் இருவரும் இணைந்து ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி உள்ளார்கள். இந்த பாடலும் இவர்களின் நடனமும் இப்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ருக்கு - குட்டி: இந்நிலையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்ட பின்னர் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார் சிம்ரன். இதைப் பார்த்த ரசிகர்கள் கலெக்டர் ஆகணும்னு ஆசை பட்ட ருக்கு, தன்னோட குட்டி முதலமைச்சர் ஆன பிறகு பார்க்கப் போயுள்ளார் ( துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இவர்கள் இருவரின் கதாபாத்திர பெயர்கள்) . இவர்கள் காம்பினேஷனில் இன்னொரு படம் வந்திருக்கலாம் நன்றாக இருந்திருக்கும் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

வேலைகளுக்கு மத்தியிலும்: முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், திரைத்துறையைச் சார்ந்த பலரும் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகை சிம்ரன் தனது குடும்பத்துடன் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் முதலமைச்சர் விஜய்யின் அலுவலகப் பணிகள் மற்றும் அவரது விவாகரத்து விசாரணைக்கு மத்தியில் நேரம் ஒதுக்கிச் சிம்ரனின் குடும்பத்தாரைச் சந்தித்துள்ளார்.


Click it and Unblock the Notifications