கண்ணுங்களா என் செல்லங்களா... பப்பிகளுடன் கொஞ்சி விளையாடும் சிம்ரன்!

மும்பை : 90ஸ் கனவுக்கன்னி சிம்ரன் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தியின் சர்தார்,சியான் 60, ராக்கெட்டரி: நம்பி விளைவு, உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடித்திருக்க இப்படம் வெளியாக தாமதமாகிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்பிகளுடன் கொஞ்சி விளையாடும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்த அந்தாதுன் திரைப்படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்க சிம்ரன், தபு நடித்த நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

வில்லி பரிமாணத்தை

வில்லி பரிமாணத்தை

90களில் கனவுக் கன்னியாக வலம் வந்த சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சீமராஜா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இப்பொழுது அந்தகன் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதால் சிம்ரனின் வில்லி பரிமாணத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் . இந்த படத்தை நடிகர் தியாகராஜன் இயக்கி தயாரித்து வருகிறார்.

சயின்டிஃபிக் கதை

சயின்டிஃபிக் கதை


இதேபோல மாதவன் இயக்கி தயாரித்து வரும் ராக்கெட்டரி : நம்பி விளைவு படத்திலும் சிம்ரன் லீட் ரோலில் நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு சயின்டிஃபிக் கதை களத்தில் உருவாகி வருகிறது. இதில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

கண்ணுங்களா என் செல்லங்களா

கண்ணுங்களா என் செல்லங்களா

விக்ரமுடன் இணைந்து சியான் 60, துருவ நட்சத்திரம் மற்றும் கார்த்தியின் சர்தார் உள்ளிட்ட படங்களிலும் சிம்ரன் நடித்து வர இப்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள க்யூட் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் சிம்ரன் செல்லமாக வளர்க்கும் தில்பர், தில்தர் பப்பிகளை கையில் வைத்துக்கொண்டு கண்ணுங்களா என் செல்லங்களா என கொஞ்சியவாறு க்யூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X