பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்

சென்னை : 1990 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடியாக வலம் வந்தவர் சிம்ரன். 1997 ல் பிரபுதேவா நடித்த விஐபி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அடுத்தடுத்து இவர் நடித்த ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, கொண்டாட்டம், அவர் வருவாளா என அனைத்து படங்களும் ஹிட் ஆகியன. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்தவர் சிம்ரன்.

 simran receives first dose of vaccination

2003 ல் தனது சிறு வயது நண்பரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட சிம்ரன், சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிறகு 2008 ல் சேவல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

சமீபத்தில் இவர் நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது அந்தகன், சியான் 60, சர்தார், துருவ நட்சத்திரம், வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 45 வயதாகும் சிம்ரன், இன்று கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

Recommended Video

தளபதி மாறவே இல்ல | ACTRESS SIMRAN EXPLAIN MASTER VIJAY | V-CONNECT | FILMIBEAT TAMIL

இதனை சமூக வலைதள பக்கங்களில் ஃபோட்டோவுடன் தெரிவித்துள்ள சிம்ரன் அத்துடன், தங்கள் குழந்தைகளை தொற்று நோய்களில் இருந்து ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடிந்த அத்தனையையும் பெற்றொர்கள் செய்கிறார்கள். இதற்கான சிறந்த வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது. நான் எனக்கான முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். உங்களைச் சுற்றியுள்ள உங்களின் அன்பானவர்களின் நன்மைக்காக நீங்களும் இதனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X