Thalapathy 69 Heroines: தளபதி 69ல் விஜய்க்கு 3 ஹீரோயின்களா?.. கன்ஃபார்ம் ஆனா கலக்கலா இருக்குமே!

சென்னை: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் 3 விஜய்யை காட்டி வெங்கட் பிரபு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்திருந்தார். கடந்த வாரம் வியாழனன்று வெளியான அந்த படம் முதல் 4 நாட்கள் அசுர வேட்டை நடத்தியது. ஆனால், அதன் பின்னர், அப்படியே வசூல் வேகம் குறைந்து விட்டது.

இந்த வார இறுதி நாட்களில் தமிழில் புதிதாக படங்கள் இல்லாத நிலையில், கோட் திரைப்படத்தின் வசூல் நேற்று இரவு முதல் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதாக தியேட்டர் ஓனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

thalapathy 69 vijay samantha 69

செப்டம்பர் 14ம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ள நிலையில், தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து 3 முன்னணி நடிகைகள் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி 69 அப்டேட்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், 2026ம் ஆண்டு திமுக, அதிமுகவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்திருக்கிறார். கப்பு முக்கியம் பிகிலு என்றும் 2026ம் ஆண்டு வெற்றிப் பெற்று முதலமைச்சர் ஆகும் முடிவுடன் அரசியல் களத்தில் விஜய் இறங்கியுள்ளார். தளபதி 69 படத்துடன் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என அவர் அறிவித்துள்ள நிலையில், அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

சிம்ரன்: தளபதி விஜய் தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு எல்லாம் வரிசையாக மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுப்பது போல கொடுத்து வருகிறார். த்ரிஷா, சினேகாவை தொடர்ந்து தளபதி 69 படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பா, மகன் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பாரா? விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பாரா என்பது எல்லாம் இப்போதைக்கு தெரியவில்லை.

thalapathy 69 vijay samantha 69

சமந்தா: விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சல் என 3 முறை இணைந்து நடித்த நடிகை சமந்தா லியோ படத்திலேயே விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டியது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் தான் அந்த படத்தில் த்ரிஷாவை லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. உடல் ஆரோக்கியத்துடன் தற்போது மீண்டும் வந்துள்ள நடிகை சமந்தா நிச்சயம் தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathy 69 vijay samantha 69

மமிதா பைஜு: 3வது ஹீரோயினாக பிரேமலு பட ஹீரோயின் மமிதா பைஜுவும் தளபதி 69 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. விஜய்யின் தீவிர ரசிகையான அவர் சூர்யாவின் வணங்கான் படத்திலேயே நடிக்க வேண்டியது. ஆனால், சூர்யா வெளியேறியதும் மமிதா பைஜுவும் வெளியேறிவிட்டார். ஜி.வி. பிரகாஷின் ரெபல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மமிதா பைஜு கண்டிப்பாக தளபதி 69 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathy 69 vijay samantha 69

டெக்னிக்கல் டீம்: எச். வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் தான் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலை வெளியாகவுள்ள அறிவிப்பில் அதிகாரப்பூர்வமாக இதையெல்லாம் அறிவிப்பார்களா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X