பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்த நடிகை: வைரலான கடைசி வாய்ஸ் மெசேஜ்
புவனேஸ்வர்: சாகும் முன்பு நடிகை சிம்ரன் சிங் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வெளியாகியுள்ளது.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த நடிகை சிம்ரன் சிங் சம்பல்பூர் மாவட்டத்தில் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் கணவர் தான் கொலை செய்ததாக சிம்ரனின் தாய் தெரிவித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிம்ரனின் கணவர் த்ருப்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இறப்பதற்கு முன்பு சிம்ரன் தனது தோழிக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த மெசேஜை சிம்ரன் எப்பொழுது அனுப்பினார் என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.
நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன், அனைவரையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் சிம்ரன் தெரிவித்துள்ளார்.
சிம்ரனை அவரின் கணவரும், அவரின் பெற்றோரும் கொடுமைப்படுத்தியதாக அவரின் தாய் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











