கையெடுத்துக் கும்பிட்ட சிம்ரன்.. அந்தகன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: பிரசாந்த் உடன் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சிம்ரன் பல வருடங்கள் கழித்து பிரசாந்த் உடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்துள்ளார். அந்தகன் திரைப்படம் பிரசாந்துக்கு கம்பேக் படமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக மாறிய நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த சிம்ரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியான சிம்ரன் கடந்த சில ஆண்டுகளாக சீமராஜா, பேட்ட, மகான், கேப்டன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். வில்லியாகவும் குணசித்ர கதாபாத்திரத்திலும் நடித்து வரும் சிம்ரன் அந்தகன் படத்திலும் வில்லியாக நடித்துள்ளார்.

Andhagan Simran Prashanth

இந்தியில் தபு மற்றும் மலையாளத்தில் மம்தா மோகன் தாஸ் செய்த கதாபாத்திரத்தில் சிம்ரன் தமிழில் நடித்து மிரட்டி விட்டார் என்றே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

லட்டுல ஆப்பு: அந்தகன் படம் பார்த்தவர்களுக்கு தெரியும் லட்டுல சிம்ரன் எப்படி ஆப்பு வைக்கிறார் என்று, பிரசாந்துக்கு கண் தெரியுதா? கண் தெரியவில்லையா? என சோதிக்கும் இடம் வேறலெவல் அப்ளாஸ்களை அள்ளி வருகின்றன. பேய் மாஸ்க் போட்டுக் கொண்டு சிம்ரன் உட்கார்ந்து இருக்கும் இடம், அதன் பின்னர் உண்மையாகவே பிரசாந்துக்கு கண் தெரியாமல் போவதற்கான வேலையை பார்த்து விட்டு அவர் காட்டும் வில்லத்தனம் மிரட்டலாக உள்ளது.

Andhagan Simran Prashanth

கையெடுத்துக் கும்பிட்ட சிம்ரன்: அந்தகன் படத்தின் ப்ரீமியர் ஷோ முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை சிம்ரன் கையெடுத்துக் கும்பிட்டு இந்த வாய்ப்பை தியாகராஜன் சார் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி என்றார். தன் மீது நம்பிக்கை வைத்து அவர் கொடுத்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியை தருவதாக கூறினார்.

உமன் சென்ட்ரிக் கதாபாத்திரங்கள்: தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு பெரிய முக்கியத்துவம் கதையில் எழுதப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், இதுபோல சில படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது தான் அவர்களால் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும் என்றும் இயக்குநர்கள் பெண் கதாபாத்திரங்களையும் வலிமையாக எழுத வேண்டும் என நடிகை சிம்ரன் கோரிக்கை வைத்துள்ளார். அரண்மனை 4 படத்தில் சிம்ரன் கிளைமேக்ஸில் ஆடிய நடனமும் அந்தகன் ஆந்தம் பாடலில் பிரசாந்த் உடன் ஆடிய நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Andhagan Simran Prashanth

அப்பா தான் காரணம்: நடிகர் பிரசாந்த் பேசும் போது, இந்த அந்தகன் படத்தின் வெற்றிக்கு முழு காரணமே இந்த படத்தின் இயக்குநர் என்னோட அப்பா தியாகராஜன் தான். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் எனக்காக பார்த்து பார்த்து செதுக்கி இந்த படத்தை உருவாக்கினார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X