ஹேப்பி பர்த்டே மணிரத்னம்.. சிம்ரன் முதல் அருண் விஜய் வரை.. வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை: மெளன ராகம், நாயகன், தளபதி, அலைபாயுதே, ஓ காதல் கண்மணி என பல அற்புத படைப்புகளை இயக்கிய இயக்குநர் மணிரத்னத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்தி கூறி வருகின்றனர்.
Recommended Video
1956ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்த இயக்குநர் மணிரத்னம் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் நடித்த சிம்ரன் முதல் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்த அருண் விஜய் வரை மணிரத்னத்துக்கு சொன்ன வாழ்த்துக்களை இங்கே காண்போம்.

சிம்ரன் வாழ்த்து
2002ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் ஆழமான தனது நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார் சிம்ரன். மணிரத்னத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் நீண்ட நாட்கள் இந்த ஜீனியஸ் இயக்குநர் வாழவேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

விக்ரம் பிரபு வாழ்த்து
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் கதையில் உருவான வானம் கொட்டட்டும் படத்தில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு லெஜெண்ட் இயக்குநர் மணிரத்னத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் தந்தை பிரபுவுடன் இணைந்து முக்கிய ரோலில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

குஷ்பு வாழ்த்து
மணிரத்னம் இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்காத நடிகை குஷ்பு, அலைபாயுதே படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினியின் நெருங்கிய தோழியான குஷ்பு, இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாளுக்கு அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் வாழ்த்து
வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன் என மணிரத்னத்துடன் இணைந்து தந்தை சரத்குமார் பயணித்து வரும் நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மெளன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, அஞ்சலி உள்ளிட்ட பல படங்களின் போஸ்டர்களை பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.

அருண் விஜய் வாழ்த்து
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் தியாகு கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்த நடிகர் அருண் விஜய், தங்கள் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றது எனது வரம் சார். நீங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











