கார்த்தியின் சர்தார் திரைப்படத்தில் இணையும் சிம்ரன்!

சென்னை : புதுப் புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி.

ரெமோ படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த சுல்தான் வெளியாகி மாஸ் வெற்றி பெற்றது.

இப்பொழுது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் கார்த்தி நடித்து வர நடிகை சிம்ரன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட வெற்றி

பிரம்மாண்ட வெற்றி

ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனிச்சிறப்பு பெற்றவர் நடிகர் கார்த்தி. அந்த வகையில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படம் பிரம்மாண்ட ரிலீஸ் உடன் பிரம்மாண்ட வெற்றியும் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி பட்டையை கிளப்பிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

அதைத் தொடர்ந்து இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு இரட்டை வேடம் என சொல்லப்படும் நிலையில்

ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஜூலை மாதம்
தொடங்க உள்ளது.

ஜி வி பிரகாஷ் குமார் இசை

ஜி வி பிரகாஷ் குமார் இசை

சர்தாரில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் கர்ணன் புகழ் ரஜிஷா விஜயன் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்தனர் . பாலிவுட் நடிகர் சுன்கி பாண்டே இதில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். முனீஸ்காந்த்,இளவரசு, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி வி பிரகாஷ் குமார் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

சின்ன குழந்தை போல் தேம்பி அழுத Rai Laxmi | இந்த Problemனால தான் Injectionனா பயம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த நிலையில் நடிகை சிம்ரன் இதில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கார்த்திக்கு இதில் இரட்டை வேடம் என்பதால் அதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X