அது ஏடாகூட கேரக்டராச்சே.. 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் நெகட்டிவ் அவதாரம் எடுக்கும் சிம்ரன்!

By

சென்னை: 'அந்தாதுன்' படத்தின் தமிழில் ரீமேக்கில், தபு நடித்த கேரக்டரில் சிம்ரன் நடிக்க இருக்கிறார்.

Recommended Video

நந்தா படத்துல நான் மட்டும் தான் திட்டு வாங்கல |ACTOR VINOD KISHAN CHAT | FILMIBEAT TAMIL

இந்தியில், அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், அந்தாதுன்.

பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

ரீமேக் உரிமை

ரீமேக் உரிமை

சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிப்பதாக அவர் அறிவித்திருந்தார். இந்தப் படத்துக்காக, உடல் எடையை 22 கிலோ குறைத்திருந்தார், பிரஷாந்த்.

பியானோ மாஸ்டர்

பியானோ மாஸ்டர்

அந்தாதுன் படத்தில் ஹீரோ, பார்வையற்ற பியானோ மாஸ்டராக நடித்திருப்பார். பிரஷாந்த், பியானோ பயின்றிருக்கிறார் என்பதால் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்துவார் என்று தியாகராஜன் கூறியிருந்தார். படத்தை மோகன் ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

மோகன் ராஜா

மோகன் ராஜா

பல தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, இதையும் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், படத்தில் இருந்து அவர் திடீரென விலகினார். இப்போது, கீர்த்தி சுரேஷ் நடித்து அமேசானில் ரிலீஸ் ஆன, பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜெ.ஜெ.பிரட்ரிக் இயக்குகிறார்.

நெகட்டிவ் சாயல்

நெகட்டிவ் சாயல்

இதில் நடிகர் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கிறார். படத்தின் தபு நடித்த கேரக்டர் நெகட்டிவ் சாயல் உள்ளது. அந்த கேரக்டரில் நடிக்க வைக்க பலரிடம் பேசி வந்தனர். இப்போது சிம்ரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

ஆர்வமாக இருக்கிறேன்

ஆர்வமாக இருக்கிறேன்

'இந்த படத்தில் தபு கேரக்டர் போல்டான ஒன்று, சவாலானதும் கூட. இந்த கேரக்டரின் மூலம் நான் என்னையே வேறு மாதிரி பார்க்க இருக்கிறேன். இதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சிம்ரன். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிதின் ஹீரோவாக நடிக்கிறார். தபு நடித்த கேரக்டரில் தமன்னாவும் ஹீரோயினாக நபா நடேஷும் நடிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X